MK Stalin: ‘இந்தியாவின் ஜெர்மனி தமிழ்நாடு’ .. முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்!

MK Stalin Germany Visit: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஜெர்மனி பயணத்தின் போது நடந்த முதலீட்டு நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு இந்தியாவின் பொருளாதார இதயம் என பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜெர்மனி மற்றும் தமிழ்நாடு இடையேயான பொருளாதார உறவுகளை மேம்படுத்த இந்தப் பயணம் உதவும் எனவும் அவர் கூறியுள்ளார்.

MK Stalin: இந்தியாவின் ஜெர்மனி தமிழ்நாடு .. முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்!

முதலமைச்சர் ஸ்டாலின்

Updated On: 

02 Sep 2025 08:58 AM

ஜெர்மனி, செப்டம்பர் 2:  இந்திய ஒன்றியத்தில் தொழில்துறையின் இதய துடிப்பாக தமிழ்நாடு செயல்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று நான்காண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு அதிகமாக தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் தொடர்ந்து மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. அதற்கான பல்வேறு முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வரும் நிலையில் தொழில் முதலீடுகளை ஈர்த்திட ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதலீட்டு மாநாட்டில் மு.க.ஸ்டாலின்

அந்த வகையில் ஜெர்மனியில் இன்று நடைபெற்ற TNRising என்ற பெயரிலான முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் சுமார் 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரூ.3,819 கோடி மதிப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளன. முன்னதாக டசல்தோர்ப் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 6,250 பேருக்கு ரூ.3,201 கோடி முதலீட்டில் வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் நார் பிரெம்ஸ்,  நார்டெக்ஸ் குழுமம், இபிஎம் பாப்ஸ்ட் ஆகிய மூன்று நிறுவனங்களுடன் புரிந்துணர் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Also Read:  ’திருப்பூர் ஜவுளித்துறை பாதிப்பு.. நடவடிக்கை தேவை’ மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மேலும் பிஎம்டபிள்யூ குடும்பத்தின் உயர் அலுவலர்களுடன் தமிழ்நாட்டில் அந்த நிறுவனத்தின் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளுவது குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசன நடத்தினார்

தமிழ்நாடு வியாபார சந்தை மட்டும் அல்ல

தொடர்ந்து இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐரோப்பிய யூனியனின் முக்கிய தொழில் துறை நாடாக எப்படி ஜெர்மனி இருக்கிறதோ அதேபோல் இந்திய ஒன்றை ஒன்றியத்தில் பொருளாதாரத்தின் இதயத்துடிப்பாக தமிழ்நாடு இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவின் ஜெர்மனி தமிழ்நாடு தான். காரணம் ஜெர்மனியை போன்று தமிழ்நாட்டிற்கும் ஒரு நீண்ட வரலாறு உள்ளது.

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரம் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அங்கு மற்றும் பார்ட்சூன், பிஎம்டபிள்யூ போன்ற பல்வேறு நிறுவனங்கள் தொழில் செய்து வருகின்றன. நான் இங்கு முதலீட்டுகளை மட்டும் ஈர்க்க வரவில்லை.  ஜெர்மனி தமிழ்நாடு ஆகிய இரண்டு பொருளாதாரங்களுக்கு இடையே பாலம் அமைக்க வந்திருக்கிறேன்.

Also Read: MK Stalin: முன்னேற்றத்துக்கான பாதை.. விடியல் பயணம் குறித்து மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

தமிழ்நாட்டிற்கு நீங்கள் வரும்போது பொருளாதாரத்திற்கான சந்தையாக மட்டும் பார்க்க மாட்டீர்கள். உங்களுடன் இருந்து உங்கள் வெற்றியை கொண்டாடுகிற பார்ட்னராக தமிழ்நாட்டை பார்ப்பீர்கள். உரையாடல்களை உறுதி மொழியாகவும் நம்பிக்கையை வளர்ச்சியாகவும் திராவிட மாடல அரசு மாற்றுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.