Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Heavy Rain Warning: கோடையில் கொட்டப்போகும் கனமழை.. அடுத்த 7 நாட்கள் அடைமழை ரெடி.. எங்கெங்கு தெரியுமா..?

Tamil Nadu Weather Update: தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. சென்னை வானிலை மையம் அடுத்த 7 நாட்களுக்கு மழை மற்றும் கனமழைக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது. குறிப்பாக தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Heavy Rain Warning: கோடையில் கொட்டப்போகும் கனமழை.. அடுத்த 7 நாட்கள் அடைமழை ரெடி.. எங்கெங்கு தெரியுமா..?
கனமழை எச்சரிக்கைImage Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 09 Jun 2025 15:33 PM

சென்னை, ஜூன் 09: தமிழ்நாட்டில் (Tamil Nadu) கடந்த 2 நாட்களுக்கு மேலாக பொதுமக்களை வெயிலானது வாட்டி வதைக்கிய நிலையில் வடதமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்து பூமியை குளிர செய்தது. அதேநேரத்தில், காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இருப்பினும், கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக புதுச்சேரியில் 40.0 டிகிரி செல்சியஸூம், குறைந்தபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தி மற்றும் தர்மபுரியில் (Dharmapuri) 23.0 டிகிரி செல்சியஸூம் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் (Pondicherry) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:

தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி, 2025 ஜூன் 9ம் தேதி தமிழ்நாட்டில் ஒருசில  இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மின்னல், இடி மற்றும் பலத்த காற்றுடன் அதாவது மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டை பொறுத்தவரை திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர்,  திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

2025 ஜூன் 10ம் தேதியான நாளை தமிழ்நாட்டில் ஒருசில  இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் தர்மபுரி, திருப்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை:

 

2025 ஜூன் 11ம் தேதி வடதமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், தென் மாவட்டங்களில்  ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் திருவாரூர், நாகபட்டினம், தஞ்சாவூர்,  மயிலாடுதுறை, புதுக்கோட்டை, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

2025 ஜூன் 12ம் தேதியில் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, தேனி, தென்காசி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

2025 ஜூன் 13ம் தேதி தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். அன்றைய நாளில் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

2025 ஜூன் 14ம் தேதி மற்றும் 2025 ஜூன் 15ம் தேதி தமிழ்நாட்டில் ஒருசில  இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். இந்த நாட்களில் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.