ஆதார் இல்லாததால் பள்ளி மாணவர் வெளியேற்றமா? உண்மை என்ன? விளக்கிய தமிழக அரசு!

Tiruvallur School Student : திருவள்ளூர் பள்ளியில ஆதார் அட்டை இல்லாததால் அரசுப் பள்ளியில் மாணவனை சேர்க்க மறுத்ததாக வீடியோ வெளியானது. இதற்கு தமிழக அரசு மறுத்துள்ளது. ஆதார் அட்டை எடுப்பதில் உண்டான காலதாமதத்தால் தாசில்தார் அலுவலகத்தில் காணொளி எடுக்கப்பட்டுள்ளது‌ என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மாணவனை பள்ளியில் சேர்க்கவில்லை என்று வதந்தி பரப்பி வருகின்றனர் எனவும் கூறியுள்ளது.

ஆதார் இல்லாததால் பள்ளி மாணவர் வெளியேற்றமா? உண்மை என்ன? விளக்கிய தமிழக அரசு!

திருவள்ளூர் பள்ளி மாணவன்

Updated On: 

14 Aug 2025 13:04 PM

திருவள்ளூர், ஆகஸ்ட் 14 : திருவள்ளூர் மாவட்டத்தில் ஆதார் இல்லாததால் அரசுப் பள்ளியில் மாணவரை சேர்கக் மறுத்ததாக வெளியான தகவலுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதாவது, ஆதார் இல்லாததால் பள்ளியில் சேர்க்க மறுத்ததாகக் கூறும் தகவல் முற்றிலும் பொய்யானது என்றும் அந்த காணொலி தாசில்தார் அலுவலகத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார்ராதிகா தம்பதி. இந்த தம்பதிக்கு 7ஆம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் என்ற மகன் உள்ளார். இவர் அருகில் இருக்கும் அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆதார் அட்டை இல்லாததல், மாணவர் சந்தோஷை பள்ளியில் சேர்க்க மறுத்துள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருந்துள்ளன.

ஆதார் இல்லாததால் பள்ளி மாணவர் வெளியேற்றமா?

இதனை அடுத்து, மாணவன் மற்றும் அவரது தந்தை ஆதார் விண்ணப்பிக்க சென்றபோது, பிறப்பு சான்றிதழ் இல்லாததால், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க இயலாது என அதிகாரிகள் கூறியதாக தெரிவித்தனர். இதனால், பிறப்பு சான்றிதழ் கோரி, வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என அலைந்ததாக மாணவனின் தந்தை கூறியுள்ளார். இதனால், மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்ததாகவும் கூறியுள்ளார். இதனால், தன் மகன் கல்வி கற்க முடியாத சூழலும் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

Also Read : ஆளுநரிடமிருந்து பட்டம் பெற மறுத்த மாணவி.. திமுகவின் தரங்கெட்ட நாடகம்.. அண்ணாமலை காட்டம்..

இதற்கிடையில், அந்த மாணவர் தனது பெற்றோரிடம் சாலையில் அமர்ந்திருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. ஆதார் இல்லாததால் மாணவர் பள்ளிக்கு வெளியில் அமர்ந்திருப்பது போன்று வீடியோ வெளியானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

தமிழக அரசு விளக்கம்

இந்த நிலையில், தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பு பிரிவு இதற்கு விளக்கம் அளித்துள்ளது. அதாவது, ஆதார் இல்லாததால் பள்ளியில் சேர்க்க மறுத்ததாகக் கூறும் தகவல் முற்றிலும் பொய்யானது என கூறியுள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “ஆதார் அட்டை இல்லாததால் அரசுப் பள்ளியில் மாணவனைச் சேர்க்க மறுத்ததாகப் பரவும் தவறான தகவல்.

Also Read : திடீரென மேம்பாலம் முன் விழுந்து வணங்கிய பிரேமலதா விஜயகாந்த்.. என்ன காரணம்?

காணொளியில் இடம்பெற்ற மாணவன் திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் திருவள்ளுவர் அரசு உதவி பெறும் பள்ளியில் 2023ல் இருந்து பயின்று வருகிறார். பள்ளியில் சேர்க்க மறுத்ததாகக் கூறும் தகவல் முற்றிலும் பொய்யானது. 11.08.25 அவரது பெற்றோர் ஆதார் அட்டை எடுப்பதாகக் கூறி மாணவனை பள்ளியில் இருந்து அழைத்து சென்றுள்ளனர்.

ஆதார் அட்டை எடுப்பதில் உண்டான காலதாமதத்தால் தாசில்தார் அலுவலகத்தில் காணொளி எடுக்கப்பட்டுள்ளது‌. ஆனால், மாணவனை பள்ளியில் சேர்க்கவில்லை என்று வதந்தி பரப்பி வருகின்றனர்.  தற்போது அந்த மாணவனுக்கு கோட்டாட்சியர் அவர்களால் பிறப்புச் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.