பஸ், ரயில் மெட்ரோவுக்கு ஒரே டிக்கெட்… நாளை அறிமுகமாகும் புதிய செயலி.. என்னென்ன வதிகள் இருக்கு?
Chennai One APP : சென்னையில் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் வகையில், ஒன் ஆப் செயலியை முதல்வர் ஸ்டாலின் 2025 செப்டம்பர் 22ஆம் தேதியான நாளை அறிமுகம் செய்ய உள்ளார். இதன் மூலம், சென்னையில் மெட்ரோ, மின்சார ரயில்கள், மாநகர பேருந்துகளில் ஒரே டிக்கெட்டில் பயணம் மேற்கொள்ளலாம்.

சென்னை ஒன் ஆப் செயலி அறிமுகம்
சென்னை, செப்டபம்பர் 21 : சென்னை ஒரே டிக்கெட்டில் மாநகரப் பேருந்துகள், மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் வகையில் ‘சென்னை ஒன்’ செயலி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் 2025 செப்டம்பர் 22ஆம் தேதியான நாளை தொடங்கி வைக்கிறார். இதன் மூலம், சென்னை மக்கள் நாளை முதல் ஒரே டிக்கெட்டில் மெட்ரோ, மின்சார ரயில்கள், பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம். சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகி கொண்டே வருகின்றனர். மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், மின்சார ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கான மக்கள் தனித்தனியாகவே டிக்கெட் எடுத்து வருகின்றனர். இதனால், பயணிகளால் செல்லும் இடத்திற்கு சரியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பயணிகளின் சிரமத்தையும், நேரத்தையும் குறைக்கும் வகையில், இதற்காக ஒருங்கிணைந்த முறையில் ஒரே டிக்கெட் நடைமுறையை கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டது. ஒரே டிக்கெட்டில் மூன்று போக்குவரத்திலும் பயணிக்கும் வகையில் கும்டா எனும் போக்குவரத்து குழுமம், தனியார் நிறுவனம் மூலம் இதற்காக புதிய செயலி தயாரித்து, இதன் அடிப்படையில் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், 2025 செப்டம்பர் 22ஆம் தேதியான நாளை முதல் சென்னையில் மெட்ரோ, பேருந்து, மின்சார ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணம் மேற்கொள்ளலாம். இதற்கான சென்னை ஒன் செயலியை முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்த உள்ளார்.
Also Read : முருங்கை இலை சூப் மூலம் கணவர் கொலை… மனைவி, காதலன் கைது!
’சென்னை ஒன்’ செயலியை எப்படி பயன்படுத்துவது?
சென்னை ஒன் செயலி மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் அதற்கான வழித்தடங்களை செயலியில் குறிப்பிட்டு, அதற்கான கட்டணத்தை செலுத்தினால், க்யூஆர் குறியீட்டு டிக்கெட், உங்களுடன் மொபையில் எண்ணிற்கு வரும், இந்த குறியீட்டை நீங்கள் பயணிக்கும் பேருந்து, மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களில் காட்டி பயணம் மேற்கொள்ளலாம். தமிழ், ஆங்கிலம் என பன் மொழிகளில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
Also Read : டாஸ்மாக்கில் கூடுதல் ரூ.10 வசூலிக்கப்படுவது ஏன்? – அமைச்சர் முத்துசாமி விளக்கம்!
இந்த செயலி டிக்கெட் வழங்குவதோடு மட்டுமில்லாமல், பயணத்தை முழுமையாக திட்டமிடும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆட்டோவிலும் பயணிக்க முடியும். உதாரணமாக, கோயம்பேட்டில் இருந்து மாலுக்கு செல்வதாக இருந்தாலும், கோயம்பேட்டில் இருந்து இறங்கியதும், தானாகவே ஆட்டோ புக் செய்யப்படும். ஆட்டோவிற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இப்படியாக இந்த செயலி நாம் பயணத்தை திட்டமிடும் என்பது குறிப்பிடத்தக்கது.