நம் முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை.. எஸ்ஐஆர் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட முதல்வர்!

CM MK Stalin Wrote About SIR | தமிழகத்தில் இன்று வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், எஸ்ஐஆர் தடுப்பதே நம் முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.

நம் முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை.. எஸ்ஐஆர் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட முதல்வர்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published: 

11 Nov 2025 14:25 PM

 IST

சென்னை, நவம்பர் 11 : எஸ்ஐஆர்-ஐ (Special Intensive Revision) தடுப்பதே நம் முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin) தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளை எதிர்க்கொண்டு தமிநாடு முழுவதும் இன்று (நவம்பர் 11, 2205) திராவிட முன்னேற்ற கழக (DMK – Dravida Munnetra Kazhagam) கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், முதலமைச்சரின் எக்ஸ் பதிவு குறித்து விரிவாக பார்க்கலாம்.

நம் முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை – முதலமைச்சர் எக்ஸ் பதிவு

தமிழகத்தில் இன்று ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் (Assembly Election) நடைபெற உள்ளது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தல் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் எஸ்ஐஆர் விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. ஆனால், இதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக எஸ்ஐஆர்-க்கு எதிர்ப்பு தமிழகம் முழுவதும் இன்று திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : அரியலூரில் வெடித்து சிதறிய சிலிண்டர் லாரி.. அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்களால் பரபரப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு

தனது பதிவில் கூறியுள்ள முதலமைச்சர், ஒருபுறம் மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையை பறிக்கும் எஸ்ஐஆர் எனும் ஆபத்துக்கு எதிரான சட்ட போராட்டம், மறுபுறம் தொடங்கப்பட்டுவிட்ட எஸ்ஐஆர் பணிகளில் குளறுபடிகளை தடுக்க உதவி அமைப்பு. களப்போராட்டத்தில் தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளை ஏந்தியும், கண்டன முழக்கங்களை எழுப்பியும், எஸ்ஐஆர் எனும் பேராபத்துக்கு எதிராக கூடியுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் தொடந்து செயலாற்றுவோம். நம் மக்களின் வாக்குரிமையை பாதுகாப்போம் என்று அவர் கூறியுள்ளார்.