MK Stalin: மத்திய அரசுக்கு சில கேள்விகள்.. முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு ட்வீட்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு பரபரப்பான கேள்விகளை எழுப்பியுள்ளார். தமிழகத்திற்கு நிதிப் பங்கீட்டில் பாரபட்சம், இந்தி திணிப்பு, கீழடி அகழாய்வு அறிக்கையை புறக்கணிப்பது, ஆளுநர்கள் மூலம் எதிர்க்கட்சி மாநிலங்களில் குழப்பம் விளைவிப்பது போன்ற முக்கியமான விவகாரங்கள் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு, அக்டோபர் 18: நாட்டு மக்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் சில கேள்விகளை நான் கேட்கிறேன் என பிரதமர் மோடியைக் குறிப்பிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பான ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை கடந்த அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 17ம் தேதி வரை நடைபெற்றது. இதில் கடைசி நாளில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன் என்பதன் கீழ் மத்திய அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பியிருந்தார். அதனை குறிப்பிட்டு தான் முதலமைச்சர் ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை நான் கேட்கிறேன்.
- ஊழல்வாதிகள் பா.ஜ.க.வின் கூட்டணிக்கு வந்தபின்பு, #WashingMachine-இல் வெளுப்பது எப்படி?
- நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்?
- ஒன்றிய அமைச்சர்களே நம் குழந்தைகளை அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளைச் சொல்லி மட்டுப்படுத்துவது ஏன்?
- எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?
- பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்காக, மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டை #SIR ஆதரிப்பது ஏன்?
- இரும்பின் தொன்மை குறித்து அறிவியல்பூர்வமாகத் தமிழ்நாடு மெய்ப்பித்த அறிக்கையைக்கூட அங்கீகரிக்க மனம்வராதது ஏன்?
- கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன்?
என பல கேள்விகளை கேட்டுள்ளார். மேலும் இதற்கெல்லாம் பதில் வருமா?, இல்லை வழக்கம்போல, வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய்ப் பிரசாரத்தைத் தொடங்குவீர்களா? எனவும் அவர் வினவியுள்ளார்.
Also Read: பாஜகவின் ஓரவஞ்சனை.. காட்டமாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!
முதலமைச்சர் ஸ்டாலினின் பதிவு
மாண்புமிகு நிதி அமைச்சர் @TThenarasu அவர்களுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை நான் கேட்கிறேன்:
ஊழல்வாதிகள் பா.ஜ.க.வின் கூட்டணிக்கு வந்தபின்பு, #WashingMachine-இல் வெளுப்பது எப்படி?
நாட்டின் முக்கியமான… pic.twitter.com/seOQ2323gR
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) October 18, 2025
முன்னதாக சட்டப்பேரவையில் பேசிய தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மிகக் குறைவான நிதி பங்கீடு பெரும் மாநிலம் தமிழ்நாடு தான் என தெரிவித்தார் மேலும் பாஜக ஆளும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மட்டும் பல மடங்கு நிதி வழங்கப்படுகிறது என குற்றம் சாட்டிய அவர் தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன் என மத்திய அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பினார்.
Also Read: ஒரே சார்ஜில் 500 கி.மீ.. பிரதமர் மோடி தொடங்கி வைத்த சூப்பர் கார்.. 100 நாடுகளுக்கு ஏற்றுமதி!
அதில், மாநில அரசுகளை ஆலோசிக்காமல் ஜிஎஸ்டி திருத்தம் செய்தது, ,கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்ததற்காக தமிழ்நாட்டை தண்டிப்பது, உத்திரபிரதேசம், குஜராத், மகாராஷ்டிராவிற்கு அளிக்கப்படும் சாலை திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு தராதது, மத்திய ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தென்னக ரயில்வேக்கு மட்டும் பாரபட்சம், மதுரை, கோயம்புத்தூர் மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி தர தாமதம், தமிழ்நாடு நிதியில் கட்டிய வீடுகளில் பிரதமர் பெயர், நிதி தராமல் புரியாத மொழியில் பெயர் வைப்பது என பல கேள்விகளை கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.