எனக்கு எதிரிகள் யாரும் இல்லை… – விஜய்யின் விமர்சனத்துக்கு முதல்வர் பதில்?

MK Stalin reacts to criticism : சென்னை கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை துவங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தனக்கு அரசியலில் யாரும் எதிரிகள் இல்லை என குறிப்பிட்டார். தவெக தலைவர விஜய்யின் விமர்சனத்துக்கு பதிலளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

எனக்கு எதிரிகள் யாரும் இல்லை... - விஜய்யின் விமர்சனத்துக்கு முதல்வர் பதில்?

விஜய் - மு.க.ஸ்டாலின்

Published: 

03 Feb 2026 16:54 PM

 IST

சென்னை, பிப்ரவரி 3 : என்னை யார் விமர்சித்தாலும், அவர்களை நான் எதிரியாக நினைப்பதில்லை என்றும் அந்த வகையில் தமிழ்நாட்டில் எனக்கு எதிரிகள் யாரும் இல்லை என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பட்ஜெட் குறித்தும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். சென்னையில் உள்ள கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பிப்ரவரி 3, 2026 அன்று நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும் சென்னை மாநகர வளர்ச்சி ஆணையம் சார்பில் கட்டப்பட்ட மறுவாழ்வு மையக் கட்டடத்தில் அமைக்கப்பட்ட இரத்த சுத்திகரிப்பு மையம், மறுவாழ்வு மையம் மற்றும் 6 நியாயவிலைக் கடைகள் ஆகியவற்றை அவர் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, ஜவஹர் நகர் முதல் சுற்றுச்சாலை பகுதியில் உள்ள கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, எஸ்ஆர்பி காலனி 8வது தெருவில் உள்ள 310 திறந்த மின்மாற்றிகளை பாதுகாப்பான மூடப்பட்ட மின்மாற்றிகளாக மாற்றும் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, கொளத்தூர் ரெட்டேரி சந்திப்பு அருகே சிஎம்டிஏ மூலம் மேம்படுத்தப்பட்ட கொளத்தூர் ஏரி பூங்காவையும் அவர் திறந்து வைத்தார்.

இதையும் படிக்க : அண்ணா நினைவு நாள்.. சென்னையில் அமைதிப் பேரணி சென்ற முதல்வர் ஸ்டாலின்..

கொளத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய மு.க.ஸ்டாலின்

 

‘எனக்கு எதிரிகள் யாரும் இல்லை’

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் பட்ஜெட் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார், இதுகுறித்து பேசிய அவர், மத்திய பட்ஜெட்டில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்த பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது. அதனால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மத்திய அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார்.

இதையும் படிக்க : “ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை”.. அஸ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!!

மேலும் பேசிய அவர், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி பேச்சுவார்த்தை குழு விரைவில் அமைக்கப்படும். என்னை விமர்சிப்பவர்கள் யாரும் எனக்கு எதிரிகள் இல்லை. நான் யாரையும் எதிரியாகப் பார்ப்பதில்லை. அனைவரையும் நண்பர்களாகவே பார்க்கிறேன். அதனால், தமிழ்நாட்டில் எனக்கு எந்த எதிரிகளும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் எல்என்ஜி - டீசல் ரயிலை அறிமுகப்படுத்திய இந்திய ரயில்வே
பீகாரில் இனி அரிசி, கோதுமை ஏடிஎமிலேயே கிடைக்கும் - அறிமுகமாகவிருக்கும் தானிய ஏடிஎம்
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்?.. செளந்தர்யா சொன்ன நச் தகவல்!!
திரைத்துறை நண்பனுக்கு பிறந்தநாள்.. அரிய புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து சொன்ன மோகன்லால்..