டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு.. தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து..

இந்த நிலையில், மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட பதிவில், “டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு. இந்திய ஜனநாயகத்தில் யாருக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும், யாருடைய குரலுக்கு இடம் இருக்கும் என்பதே தொகுதி மறுவரையறையின் நோக்கம். அது ஒன்றியத்தை பலப்படுத்த வேண்டுமே ஒழிய பலவீனப்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.

டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு.. தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து..

கோப்பு புகைப்படம்

Published: 

17 Apr 2026 21:13 PM

 IST

ஏப்ரல் 17, 2026: தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு போராடியது, தமிழ்நாடு வென்றது” என குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 278 வாக்குகளும், எதிராக 211 வாக்குகளும் பதிவாகின.

தோல்வியடந்த தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி:

இது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா (131வது திருத்தம்) என்பதால், நிறைவேற்ற தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் மசோதா நிறைவேறவில்லை.

இந்த மசோதா நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு அறிவித்ததிலிருந்து, தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தியும், கருப்புச் சட்டை அணிந்தும் போராட்டம் நடத்தினார். கூட்டணி கட்சிகளும் இதில் பங்கேற்றன.

தமிழ்நாடு போராடியது – வென்றது – முதல்வர் மு.க ஸ்டாலின்:

இந்த நிலையில், மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட பதிவில், “டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு. இந்திய ஜனநாயகத்தில் யாருக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும், யாருடைய குரலுக்கு இடம் இருக்கும் என்பதே தொகுதி மறுவரையறையின் நோக்கம். அது ஒன்றியத்தை பலப்படுத்த வேண்டுமே ஒழிய பலவீனப்படுத்தக் கூடாது.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் கலைஞர் ஆகியோரின் பாதையில் தமிழ்நாடு எப்போதும் நீதி, கண்ணியம், கூட்டாட்சிக்காக நின்றுள்ளது. தென்னிந்தியா ஒன்றிணைந்தது; நமது குரல் கேட்கப்பட்டது; ஜனநாயகம் வென்றது!

மேலும் படிக்க: தேர்தல் பணிமனைக்கு முன் விசில் சின்னத்தில் கோலமிட்ட விஜய்.. வீடு வீடாக சென்று வாக்குசேகரிப்பு..

நாம் தொகுதி மறுவரையறையை எதிர்க்கவில்லை. நன்கு சிந்தித்து, அனைவரையும் கலந்தாலோசித்து, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான நடைமுறையையே வலியுறுத்தினோம்.

தமிழ்நாட்டின் உரிமைகள், நமது பண்பாடு மற்றும் அடையாளம், இந்திய கூட்டாட்சி ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்பட்டால், ஒற்றுமையுடன் நிற்பதுதான் நமது உறுதி.

இந்த அநீதியை எதிர்த்து ஒரணியில் நின்ற அனைத்து தோழமைக்கட்சிகளுக்கும் என் நன்றி,” என தெரிவித்துள்ளார்.

Follow Us
வெறும் 9 ரூபாய் சம்பள உயர்வு.. இணையத்தில் வைரலாகும் பதிவு..
பெங்களூருவில் 500 ரூபாயில் வாழ முடியும் - வைரலாகும் பெண்ணின் அனுபவம்
கிளினிக்குள் சிக்கிய சிறுவன்: இணையத்தில் வைரலாகும் வீடியோ..
காதலனுக்காக பெற்றோருக்கு விஷம் கொடுத்த சிறுமி.. இணையத்தில் கசிந்த ஆடியோ..