25 இடங்களில் அன்புச்சோலை மையங்களை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.. இதன் முக்கியத்துவம் மற்றும் நோக்கம் என்ன?

Anbu Solai Centre In Tamil Nadu: அன்புச் சோலை திட்டமானது, முதியோர்களை போற்றும் தமிழ் பாரம்பரியத்தை பிரதிபலிப்பதோடு, முதியோர்களின் பாதுகாப்பையும் நன்முறையில் பராமரிப்பதையும் உறுதி செய்கிறது. இதன் மூலம் முழுமையான நிறுவனம் சார்ந்த பராமரிப்பு தேவையை குறைத்து, குடும்ப பிணைப்பை வலுப்படுத்த உதவுகிறது.

25 இடங்களில் அன்புச்சோலை மையங்களை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.. இதன் முக்கியத்துவம் மற்றும் நோக்கம் என்ன?

முதல்வர் ஸ்டாலின்

Published: 

10 Nov 2025 17:52 PM

 IST

திருச்சி, நவம்பர் 10, 2025:, புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் இரண்டு நாள் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, மூத்த குடிமக்களின் வாழ்வை மேம்படுத்தும் “அன்புச் சோலை” திட்டத்தை தொடங்கி வைத்தார். அன்புச் சோலை – முதியோர் மனமகிழ் மையங்கள் திட்டம், மூத்த குடிமக்களின் ஆரோக்கியமான வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வகையில் சமூக மையங்களாக செயல்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல், வேலூர், தூத்துக்குடி, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு ஆகிய பத்து மாநகராட்சிகளில் தலா இரண்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தொழில்துறை மாவட்டங்களான கிருஷ்ணகிரி, இராணிப்பேட்டை மற்றும் பெருநகரமான சென்னையில் தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம் ஆகிய இடங்களில் சேர்த்து மொத்தம் 25 அன்புச் சோலை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: தொடங்கும் சபரிமலை சீசன்.. தமிழகம் வழியாக செல்லும் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு..

மையங்களின் முக்கிய அம்சங்கள் மற்றும் நோக்கம்:


இந்த மையங்களில்

  • இயன்முறை மருத்துவ சேவைகள் (Physiotherapy), யோகா, பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் நூலகம் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
  • முதியோருக்கு வழங்கப்படும் இயன்முறை மருத்துவ சேவைகள், பொழுதுபோக்கு மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்வுகள் மூலம் மனமும் உடலும் சுறுசுறுப்புடன் இருக்கச் செய்தல்.
  • முதியோர் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டு சமூக உறவுகளை வலுப்படுத்துதல்.
  • ஆண், பெண் இருவரும் வேலை பார்க்கும் குடும்பங்களுக்கு, அவர்களது மூத்த உறுப்பினர்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்தல் ஆகும்.

மேலும் படிக்க: ‘மீண்டும் வெள்ளத்தில் மிதந்த சென்னை’.. சரமாரி கேள்வி எழுப்பும் பொதுமக்கள்!!

தமிழ் பாரம்பரியத்தையும் குடும்ப பிணைப்பையும் வலுப்படுத்தும் முயற்சி

அன்புச் சோலை திட்டமானது, முதியோர்களை போற்றும் தமிழ் பாரம்பரியத்தை பிரதிபலிப்பதோடு, முதியோர்களின் பாதுகாப்பையும் நன்முறையில் பராமரிப்பதையும் உறுதி செய்கிறது. இதன் மூலம் முழுமையான நிறுவனம் சார்ந்த பராமரிப்பு தேவையை குறைத்து, குடும்ப பிணைப்பை வலுப்படுத்த உதவுகிறது.

மேலும், வேலைக்கு செல்ல ஆர்வமுள்ள பெண்கள் தங்கள் வீட்டிலுள்ள முதியோர்களை பகல் நேரங்களில் பராமரிக்க இயலாததால் வேலைக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதற்கான தீர்வாக, இந்த மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பெண்கள் வேலைக்கு செல்லும் காலத்தில் அவர்களது வீட்டு முதியவர்கள் தனிமையில்லாமல், மகிழ்ச்சியுடன் நேரத்தைச் செலவிடுவதற்கும், சமூக உறவுகளை பேணுவதற்கும் வழிவகை செய்யப்படுகிறது.