திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்த முதலமைச்சர் விஜய்.. கட்டியணைத்து வரவேற்ற உதயநிதி ஸ்டாலின்..

தமிழ்நாட்டின் முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் நேற்று காலை பதவியேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை முதலமைச்சர் விஜய் சந்தித்தார்.  முதலமைச்சர் விஜய் வருகை தந்தபோது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவரைக் கட்டியணைத்து உள்ளே அழைத்துச் சென்றார்.

திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்த முதலமைச்சர் விஜய்.. கட்டியணைத்து வரவேற்ற உதயநிதி ஸ்டாலின்..

மு.க ஸ்டாலினை சந்தித்த முதல்வர் விஜய்..

Updated On: 

11 May 2026 16:13 PM

 IST

சென்னை, மே 11, 2026: திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை முதலமைச்சர் விஜய் சந்தித்தார்.  முதலமைச்சர் விஜய் வருகை தந்தபோது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவரைக் கட்டியணைத்து உள்ளே அழைத்துச் சென்றார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேற்று உள்விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, இன்று மரியாதை நிமித்தமாக மூத்த அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் முதல்வரை சந்தித்த முதல்வர் விஜய்:

இந்த சூழலில், சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற பிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது, இருவரும் சால்வை அணிவித்து மரியாதையை வெளிப்படுத்திக்கொண்டனர். வீட்டிற்குள் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை, உதயநிதி ஸ்டாலின் ஆரத்தழுவி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டனர்.

மேலும் படிக்க: ‘200 யூனிட் இலவச மின்சாரம்’.. தமிழக அரசுக்கு இத்தனை ஆயிரம் கோடி கூடுதல் நிதிச்சுமையா?.. ஷாக் தகவல்!!

மூத்த தலைவர்களை சந்திக்க திட்டம்:

தொடர்ந்து, மதிமுக தலைவர் வைகோவையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவு அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனையும் சந்திக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழக சட்டசபை சபாநாயகர் தேர்தல்.. தவெக சார்பில் ஜே.சி.டி.பிரபாகரை களமிறக்கிய முதல்வர் விஜய்!!

நேற்று தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், பிற்பகலில் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலுக்கு சென்று விஜய் மரியாதை செலுத்தினார்.

இதுபோல், பிரதமர் நரேந்திர மோடியையும், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி