AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. எங்கெல்லாம் மழை இருக்கும்?

மே 11ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும், மே 12ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான முதல் லேசான மழையும் பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. எங்கெல்லாம் மழை இருக்கும்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 11 May 2026 15:15 PM IST

மே 11, 2026: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பதிவாகி வருகிறது. இந்த சூழலிலும், வரக்கூடிய நாட்களில் பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், வடக்கு இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நிலவுவதாகவும், இது அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரக்கூடிய நாட்களில் மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடரும் மழை:

மே 11ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும், மே 12ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான முதல் லேசான மழையும் பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மே 13 மற்றும் 14ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை:

மே 15 மற்றும் 16ஆம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 14ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தவெக அரசுக்கு ஆதரவு அளிக்க முடியாது.. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்!

வெப்பநிலை எப்படி இருக்கும்?

அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது என்றும், இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பதிவாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us