ராமநாதபுரம் செல்லும் மு.க.ஸ்டாலின்.. விஜய்க்கு பதிலடி கொடுப்பாரா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்திற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அக்டோபர் 3ஆம் தேதி பேராவூரில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று, சுமார் 54,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அப்போது கரூர் சம்பவம் குறித்த விஜய் கேள்விக்கு அவர் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமநாதபுரம் செல்லும் மு.க.ஸ்டாலின்.. விஜய்க்கு பதிலடி கொடுப்பாரா?

மு.க.ஸ்டாலின் - விஜய்

Published: 

02 Oct 2025 06:30 AM

 IST

ராமநாதபுரம், அக்டோபர் 2: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அரசு முறை பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்கிறார். மாலையில் சென்னையில் இருந்து புறப்படும் அவர் அக்டோபர் 3ஆம் தேதி நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கவுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் வியாழக்கிழமை மாலை மதுரை செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். ராமநாதபுரம் மாவட்ட எல்லையான பார்த்திபனூரில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக சென்று அவருக்கு உற்சாக வரவேற்பளிக்க உள்ளனர்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு ராமநாதபுரம் வரும் முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் தங்குகிறார். இதன் பின்னர் அக்டோபர் 3ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ராமநாதபுரம் அருகே உள்ள பேராவூரில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.  அப்போது ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்ட பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

Also Read:  CM சார்.. அவங்க மேல கை வைக்காதீங்க – வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

மேலும் பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுவதோடு சுமார் 54,000 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், திமுக தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு அவரை வரவேற்கும் விதமாக பார்த்திபனூர் முதல் ராமநாதபுரம் வரை வழிநெடுக்க திமுக கொடி, ஆங்காங்கே பேனர்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

மேலும் பார்த்திபனூர்,  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பேராவூரை சுற்றியுள்ள பகுதிகள், முதலமைச்சர் பயணப்படும் வழித்தடங்கள் ஆகியவற்றில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடைவிதித்து மாவட்ட எஸ்பி சந்தீஷ் உத்தரவிட்டுள்ளார்.

Also Read:  சமூக விடுதலை நீண்ட பயணம்! இதை நான் மாற்றுவேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

விஜய்க்கு பதிலடி கொடுப்பாரா?

இந்த நிலையில் கரூர் சோக சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த கூட்டத்தில் கருத்துகளை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கரூர் நிகழ்வு தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோவில், முதலமைச்சருக்கு பழிவாங்கும் எண்ணம் இருந்தால் தன்னை ஏதாவது செய்யுமாறு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இதுவரை முதலமைச்சர் எந்தவித பதிலும் தெரிவிக்காத நிலையில் ராமநாதபுரம் நிகழ்ச்சியில் உரையாற்றும் போது பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.