Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Niti Aayog : நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

MK Stalin Going Delhi to Attend Niti Aayog Meeting | நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 23, 2025) டெல்லி செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார்.

Niti Aayog : நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 23 May 2025 07:29 AM

சென்னை, மே 23 : நிதி ஆயோக் கூட்டத்தில் (Niti Aayog Meeting) பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin) இன்று (மே 23, 2025) டெல்லி செல்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi) தலைமையில் நாளை (மே 24, 2025) நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்ப அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் இன்று டெல்லி செல்கிறார். இந்த நிலையில், முதலமைச்சரின் டெல்லி பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

நிதி ஆயோக் கூட்டம் என்றால் என்ன? – அது எப்படி உருவானது?

1950 ஆம் ஆண்டு இந்தியாவில் மத்திய திட்டக்குழு உருவாக்கப்பட்டது. நாட்டின் 5 ஆண்டு திட்டத்தை செயல்படுத்தும் வகையில் இந்தக் குழு அமைக்கப்பட்டது. அதன்படி ஆண்டுதோறும் கூடும் இந்த குழு, நாட்டின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அரசு நடத்தி முடிவுகளை எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு மத்திய திட்டக்குழு, நிதி ஆயோக் அமைப்பாக மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ள நிலையில், அவரது தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த கூட்டம் நடைபெறுகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் ஜூலை மாதத்தில் நடைபெற்ற நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான கூட்டம் தற்போது மே மாதத்தில் நடைபெறுகிறது.

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் – பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ளது

ஒவ்வொரு ஆண்டும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறும் நிலையில், இந்த ஆண்டு மே 24, 2025 அன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை வழக்கம்போல பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

இந்த நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு தேவையான நிதியை விடுவிக்கும் படி, பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என கூறப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

அடிக்கடி மன அழுத்தம் ஏற்படுதா? இந்த எளிய டிப்ஸ்களை டிரை பண்ணுங்க
அடிக்கடி மன அழுத்தம் ஏற்படுதா? இந்த எளிய டிப்ஸ்களை டிரை பண்ணுங்க...
தினமும் காலையில் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
தினமும் காலையில் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?...
கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!
கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!...
சென்னையின் இந்த 5 இடங்களில் அமைதியாக நட்சத்திரங்களை ரசிக்கலாம்!
சென்னையின் இந்த 5 இடங்களில் அமைதியாக நட்சத்திரங்களை ரசிக்கலாம்!...
இப்படி இருந்தால் சுகர்தான்.. தோலில் தெரியும் சில அறிகுறிகள்!
இப்படி இருந்தால் சுகர்தான்.. தோலில் தெரியும் சில அறிகுறிகள்!...
டெல்லியில் சோனியா, ராகுல் காந்தியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்..
டெல்லியில் சோனியா, ராகுல் காந்தியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்.....
'தக் லைஃப்' இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான வீடியோ!
'தக் லைஃப்' இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான வீடியோ!...
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த 7 எளிய பழக்கங்கள்
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த 7 எளிய பழக்கங்கள்...
முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை.. இப்படி ட்ரை பண்ணுங்க!
முகத்தை பளபளப்பாக்கும் கொத்தமல்லி இலை.. இப்படி ட்ரை பண்ணுங்க!...
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட படக்குழு
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்ட படக்குழு...
'டூரிஸ்ட் பேமிலி' படக்குழுவை நேரில் சந்தித்துப் பாராட்டிய சூர்யா!
'டூரிஸ்ட் பேமிலி' படக்குழுவை நேரில் சந்தித்துப் பாராட்டிய சூர்யா!...