உத்தரப் பிரதேச மாநிலத்தின் காஜிபூரில் ஒருகாலத்தில் டாரி காட் ரயில் நிலையம் என்ற விசித்திரமான நிலையம் இருந்தது. அங்கு ரயில் பாதை நதிக்கரையில் முடிவடைந்துவிடும்; அதற்கு அப்பால் ரயில்கள் செல்லாது. பயணிகள் ரயிலிலிருந்து இறங்கி, கங்கை நதியை படகில் கடந்து மறுபுறம் சென்று தான் பயணத்தைத் தொடர வேண்டியிருந்தது.