தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது…முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை!

Tamil Nadu Cabinet Meeting: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஆலோசனைகளை மேற்கொள்வதற்கான அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது...முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனை!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகிறது

Published: 

05 Feb 2026 06:30 AM

 IST

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதாகவும், இதற்கான தேர்தல் தேதி அடுத்த மாதம் மார்சில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழக அரசு கடந்த மாதம் இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்தி முடித்திருந்தது. இதைத் தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வந்ததாக தகவல் வெளியானது. அதன்படி, தமிழக அமைச்சரவை கூட்டத்தை நடத்தி, அதில் இடைக்கால பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று வியாழக்கிழமை ( ஜனவரி 5) நடைபெறுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை

இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெற உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட்டில் வாக்காளர்களை கவரும் வகையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. அதன்படி, இந்த பட்ஜெட் வருகிற பிப்ரவரி 13-ஆம் தேதிக்கு பிறகு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க: ஜெயலலிதாவை ரோல் மாடல் என்கிறார்… அப்போ யார் ஊழல் சக்தி? விஜய்யிடம் எடப்பாடி பழனிசாமி கேள்வி

இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி

ஏனென்றால், இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள் வருகிற பிப்ரவரி 12 அல்லது 13- ஆம் தேதிகளில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தமிழகம் வர உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தேர்தல் அதிகாரிகளின் வருகையை பொறுத்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி மாறுபடலாம் எனவும் தெரிகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாகும். ஆனால், இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதாலும், மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிப்பு இருக்கும் என்பதாலும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாத நிலை உள்ளது.

4 நாள்கள் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர்

இதன் காரணமாகவே தமிழக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. அதன்படி, இந்த பட்ஜெட் கூட்டத் தொடரை சுமார் 4 நாட்கள் நடத்தி முடிக்கலாம் எனவும், அதில் ஒரு நாளில் சட்டப்பேரவை கூட்டத்துடன் ஒரு பகுதியாக நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் தங்கம் தென்னரசு தமிழகத்துக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து, அரசுத் திட்டங்களுக்கான நிதியை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: துணைவேந்தர் நியமன வழக்கு – தமிழக அரசுக்கு ஆதரவாக வந்த தீர்ப்பு – என்ன நடந்தது?

Follow Us
Related Stories
சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த விமான முனையம்… எப்போது திறக்கப்படும்… வெளியான முக்கிய தகவல்!
யாருக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு?.. திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிப்பு!!
சென்னையில் ஓப்பன் டாப் பேருந்து திட்டத்துக்கு கைவிரிப்பு.. சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி.. என்ன காரணம்!
சென்னை டூ கேரளம் பருந்து போல பறக்கலாம்.. வருகிறது புல்லட் ரயில் சேவை… திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி கேட்பு!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை.. எங்கெல்லாம் தெரியுமா..? வானிலை நிலவரம் இதோ..
Poonamalle Constituency Election 2026: வேகமான நகர்புற வளர்ச்சியை காணும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி.. வெற்றி யாருக்கு?
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..