டிடிவி தினகரன் – அண்ணாமலை திடீர் சந்திப்பு.. பின்னணி என்ன?
Annamalai Meets TTV Dhinakaran : சென்னையில் அடையாறில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் இல்லத்திற்கு சென்றே தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியதாக தெரிகிறது.

அண்ணாமலை - டிடிவி தினகரன் சந்திப்பு
சென்னை, செப்டம்பர் 23 : அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது இருவரும் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது. என்டிஏ கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியேறிய நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பு பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளன. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஒருபுறம் ஆளும் திமுக, அதன் கூட்டணி கட்சிகளும், மறுபுறம் அதிமுக பாஜக கூட்டணி கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
தேமுதிக, பாமக, தவெக, நாதக இன்னும் கூட்டணி முடிவை எடுக்கவில்லை. இந்த சூழலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் விலகினார். இது பாஜகவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் வாக்குகள் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததது. இவர்கள் கூட்டணியில் இருந்து விலகியது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கூறுகின்றனர். அதே நேரத்தில், பாஜகவின் அண்ணாமலையை டிடிவி தினகரன் புகழ்ந்து பேசி வருகிறார்.
Also Read : ஒரு மணி நேரம் மீட்டிங்.. எடப்பாடி பழனிசாமி – நயினார் நாகேந்திரன் சந்திப்பு.. என்ன மேட்டர்?
டிடிவி தினகரன் – அண்ணாமலை
எனவே, கோபத்தில் வெளியேறிய டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர நயினாருக்கு பாஜக மேலிடம் உத்தரவிட்டது. ஏற்கனவே, “நான் தினகரனுடன் தொலைபேசியில் பேசினேன். அவரை நேரில் சந்தித்து மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருமாறு வலியுறுத்துவேன்” என்று அண்ணாமலை கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது டிடிவி தினகரனை அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். இவர்கள் இருவரும் ஒருமணி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது என்டிஏ கூட்டணியில் இணைய சொல்லி அண்ணாமலை கூறியதாக தெரிகிறது.
மேலும், முதல்வர் வேட்பாளரை அறிவித்தார் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவோம் என டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது எனவும் அவர் கூறியதாக தெரிகிறது. எனவே, முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி மாற்ற வாய்ப்பு இல்லாததால், டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என்டிஏ கூட்டணியில் இணைவது கடினம் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.