Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள்.. மருத்துவ முகாமை திறந்து வைத்த நயினார் நாகேந்திரன்!

பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள்.. மருத்துவ முகாமை திறந்து வைத்த நயினார் நாகேந்திரன்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Sep 2025 23:14 PM IST

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாமை தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன." என்றார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாமை தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனுடன், மக்களுக்கு உதவ மருத்துவ முகாம்கள், உணவு விநியோகம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை பாஜக ஏற்பாடு செய்து வருகிறது. இன்று அதாவது 2025 செப்டம்பர் 13ம் தேதி முதல் அக்டோபர் 8ம் தேதி வரை, இரண்டு வாரங்களுக்கு, பிரதமரின் பிறந்தநாளை சேவை வாரமாக கொண்டாடுவோம், மக்களுக்கு ஆதரவளிக்கும் நலத்திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்றார்.