Edappadi Palaniswami: NDA கூட்டணியில் நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்.. தடாலடியாக சொன்ன எடப்பாடி பழனிசாமி!
Tamil Nadu Assembly 2026 Elections: எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் நான்தான் என அறிவித்து, பரப்புரைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். விஜயின் அதிமுகவுடனான கூட்டணி சாத்தியம் குறித்துத் தெளிவின்மை நீடிக்கிறது. தேமுதிக கூட்டணி 2026 ஜனவரிக்குப் பிறகுதான் உறுதி செய்யப்படும். அமமுக தலைவர் தினகரன், தேர்தல் பின் முதல்வர் யார் என்பதை முடிவு செய்வோம் எனக் கூறியுள்ளார்.

சென்னை, ஜூலை 05: தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, அமமுக, ஓபிஎஸ் அணிகள் ஒன்றாக ஒரே கூட்டணியில் உள்ளது. முன்னதாக, கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. அதேநேரத்தில், பாஜகவுடன் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது. இந்தநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அதிமுக பாஜகவுடன் (ADMK – BJP Alliance) கூட்டணி அமைத்தது. தற்போது அதே கூட்டணியில் ஓபிஎஸ் அணியும் அமமுக கட்சியும் ஒன்றாக பயணிக்கிறது. இந்தநிலையில், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் (2026 Assembly Elections Tamil Nadu) தேசிய ஜனநாயக கூட்டணி, ஆட்சி அமையும் என அமித்ஷாவே தெளிவுபடுத்தியுள்ளார். நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், தவெக தலைவர் விஜய் குறித்தும் தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.
நான்தான் முதல்வர் வேட்பாளர்:
வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை முன்ண்ட்டு வருகின்ற 2025 ஜூலை 7ம் தேதி முதல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை பயணம் மேற்கொள்கிறார். இதனை முன்னிட்டு, 2025 ஜூலை 5ம் தேதியான இன்று எடப்பாடி பழனிசாமி சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். அதன்பின், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ”மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” சுற்றுப் பயணத்திற்கான பாடல் மற்றும் லோகோவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.




தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக கூட்டணியில் விஜய் இணைவாரா என்ற கேள்விக்கு விஜய் தான் முடிவு எடுக்க வேண்டும்.” என்றார். அப்போது, தவெக தலைவர் விஜய் அதிமுகவை விமர்சனம் செய்தது குறித்து பேசிய அவர், “ தங்களது கட்சியை வளர்பதற்காக, மற்ற கட்சிகளை விமர்சிப்பது இயல்பான ஒன்றுதான்.
தமிழ்நாட்டில் மக்கள் விரோத திராவிட முன்னேற கழக ஆட்சியை அகற்ற வேண்டும். யாரெல்லாம் திமுக ஆட்சியை அகற்ற நினைக்கிறார்களோ அவர்களுடன் நாங்கள் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அந்த கட்சிகளும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
அதிமுக ஒரு மிக வலுவான கூட்டணி:
கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ @EPSTamilNadu அவர்களின் மடல் #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்#மக்களைக்_காப்போம்#தமிழகத்தை_மீட்போம் pic.twitter.com/5Jh00hvfxe
— AIADMK – -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) July 5, 2025
திராவிட முன்னேற கழக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று எண்ணுகின்ற அனைத்து தோழமைக் கட்சிகளையும் இந்த சுற்றுப் பயணத்தின் மூலம் பங்கேற்க எனது அழைப்பை பதிவு செய்கிறேன். திராவிட முன்னேற கழக ஆட்சியில் உள்ள குறைகளை மக்களிடம் எடுத்துரைப்பதே இந்த பரப்புரையின் நோக்கம். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஒரு மிக வலுவான கூட்டணி உருவாக்கி ஆட்சியைப் பிடிக்கும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக – பாஜக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கெனவே அமித் ஷா தன்னை அறிவித்து விட்டார். தேமுதிகவுடனான கூட்டணி, 2026 ஜனவரிக்கு பிறகுதான் தெரிய வரும்” என்றார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “தேர்தலுக்குப் பின்புதான் முதலமைச்சர் யார்? என்பதை முடிவு செய்வோம்” என தெரிவித்தார். இது தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.