வேனும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து.. 4 இளைஞர்கள் பரிதாப பலி!

Omni Van-Bus Collision near Thiruvarur | கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வேனில் சில இளைஞர்கள் சென்றுக்கொண்டிருந்த நிலையில், திருவாரூர் அருகே வேன் மீது அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி கடும் விபத்துக்குள்ளானது. இந்த நிலையில், இந்த கொடூர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

வேனும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து.. 4 இளைஞர்கள் பரிதாப பலி!

மாதிரி புகைப்பட்ம்

Published: 

05 May 2025 08:32 AM

திருவாரூர், மே 05 : திருத்துறைப்பூண்டி அருகே ஆம்னி வேன் மற்றும் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான நிலையில், 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திருவனந்தபுரத்தில் இருந்து ஆம்னி வேன் மூலம் 7 இளைஞர்கள் வேளாங்கண்ணிக்கு சென்றுக்கொண்டிருந்த நிலையில், இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இளைஞர்கள் விபத்தில் உயிரிழந்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்ற 7 இளைஞர்கள்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் சிலர் திருவனந்தபுரத்தில் இருந்து ஆம்னி வேன் மூலம் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டு சென்றுள்ளானர். அந்த வானில் சாஜிநாத், ராஜேஷ், ராகுல், சுஜித், சாபு, சுனில், ரஜினிஷ் ஆகியோர் பயணம் செய்துள்ளனர். வேணை ராஜேஷ் என்ற 30 வயது இளைஞர் ஒருவர் ஓட்டியுள்ளார். அப்போது திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கருவேப்பஞ்சேரி என்ற இடத்தில், வேன் மீது அரசு பேருந்து ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 3 பேர் – 4 பேர் பலி

இந்த விபத்தில் இளைஞர்கள் பயணம் செய்த வேன் முற்றிலும் நொறுங்கி சேதுமடைந்த நிலையில், வேனில் பயணம் செய்த சாஜிநாத், ராகுல், சுஜித் மற்றும் வேனை ஓட்டி சென்ற ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் வேனில் பயணம் செய்த மற்ற சில இளைஞர்களான சாபு, சுனில் மற்றும் ரஜினிஷ் ஆகியோர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளனர்.

இந்த விபத்தை கண்ட அந்த பகுதி பொதுமக்கள், காயம் அடைந்த இளைஞர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை

வழக்கமாக தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகாலை நேரங்களில் இத்தகைய விபத்து சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வரும் நிலையில், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.