முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்பான ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, நடிகர் சல்மான் கான் தனது அறுபதாவது பிறந்தநாளை பன்வெல் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் கொண்டாடிய போது எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தோனியும் தனது மனைவி சாக்ஷியுடன் கலந்து கொண்டார்.