டிசம்பர் 31க்கான PAN Aadhaar இணைப்பு கடைசி தேதி நெருங்கி வரும் நிலையில், யார் இந்த இணைப்பை கட்டாயமாக செய்ய வேண்டும், யார் சட்டப்படி விலக்கு பெறுகிறார்கள் என்பதில் வரிவிதிப்பாளர்களிடையே குழப்பம் நீடித்து வருகிறது. பெரும்பாலான நபர்களுக்கு PANஐ Aadhaar உடன் இணைப்பது கட்டாயமானதாக இருந்தாலும், வருமான வரி சட்டம் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு தெளிவான விலக்குகளை வழங்கியுள்ளது.