விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது. முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா, இந்த இருவரின் டெஸ்ட் ஓய்வு இயல்பான முடிவு போல தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் எதிர்பார்த்த அளவில் விளையாடவில்லை.