Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்….நாளை நடைபெறுகிறது!

Stalin Welfare Project Medical Camp: சென்னையில் தண்டையார் பேட்டையில் நாளை நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த மருத்து முகாமானது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது .

சென்னையில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்….நாளை நடைபெறுகிறது!
நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 09 Jan 2026 17:22 PM IST

தமிழக அரசு சார்பில் மாநிலம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இந்த திட்டமானது கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் ஒரு மண்டலத்துக்கு ஒரு மருத்துவ முகாம் வீதம் மொத்தம் 15 மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, தற்போது வரை 12 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், இதில் 29,267 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, தண்டையார்பேட்டை மண்டலம், கல்யாணபுரத்தில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 13- ஆம் கட்டமாக நாளை சனிக்கிழமை ( ஜனவரி 10) நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற உள்ளது. இந்த மருத்துவ முகாமானது காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

முகாமில் பல்வேறு வகையான சிகிச்சை

இந்த முகாமில், பொது அறுவை சிகிச்சை, பொது மருத்துவம், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், இருதவியல் மருத்துவம், குழந்தை மருத்துவம், தோல் மருத்துவம், கண் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம் உள்ளிட்டவையும் ஸ்கேன் பரிசோதனை ஆகிய 17 துறைசார் நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.

மேலும் படிக்க: ”உங்கள் கனவை சொல்லுங்கள்” திட்டம்.. இன்று தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்..

முழு உடல் ஆரோக்கிய பரிசோதனை

இதே போல, முழு உடல் ஆரோக்கிய பரிசோதனை, தொழுநோய் பரிசோதனை, ஆரம்பகால புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, காசநோய் பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், பயனாளிகள் பதிவு செய்தல், மாற்றுத்திறன் உடைய நபர்களுக்கு அரசின் அங்கீகாரம் சான்றிதழ் அளிக்கப்படுகிறது. மேலும், தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் வழங்கப்படும் உறுப்பினர் அடையாள அட்டையை அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ்

மேலும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்பட உள்ளது. இவ்வளவு சிறப்பு மிக்க நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமில் சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் உரிய நேரத்தில் பங்கேற்று தங்களுக்கான உடல் பரிசோதனைகளை மேற்கொண்டு பயன்பெற வேண்டும். இதே போல, தங்களுக்கான சான்றிதழ் உள்ளிட்டவற்றையும் பெற்று பயன் பெறலாம் என்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க: “இதுதான் எனது 2026 தேர்தல் வாக்குறுதி”.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி!!