Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வெடிகுண்டை அழிக்கும் பணி… காவலருக்கு ஏற்பட்ட சோகம்… படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

Bomb Disposal Accident : நீதிமன்றம் உத்தரவின்பேரில் சென்னை மீனம்பாக்கம் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் சிறப்பு பிரிவு காவலர் தங்கேஸ்வரன் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக வெடிகுண்டு வெடித்ததில் அவர் படுகாயமடைந்தார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெடிகுண்டை அழிக்கும் பணி… காவலருக்கு ஏற்பட்ட சோகம்… படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 28 Jan 2026 19:20 PM IST

சென்னை, ஜனவரி 28 : சென்னை (Chennai) மீனம்பாக்கம் பகுதியில், நாட்டு வெடிகுண்டுகளை செயலிழக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு காவல் துறையின் சிறப்பு பிரிவு அதிகாரி ஒருவர், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிப்பில் கடுமையாக காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு காவல் துறையில் செயல்பட்டு வரும் ‘மருதம்’ என்ற சிறப்பு பிரிவு, சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் (Country Bomb) குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் காலாவதியான நாட்டு வெடிகுண்டுகளை பாதுகாப்பாக அழிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த பிரிவின் முக்கிய நோக்கமாகும்.

இந்த நிலையில், சென்னை கன்னியாகுமரி உட்பட்ட மருதம் சிறப்பு பிரிவில் ஆய்வாளராக பணியாற்றி வரும் 55 வயதாகும் தங்கேஸ்வரன், முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், சென்னை கே.கே. நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை நீதிமன்ற உத்தரவின் பேரில் செயலிழக்க செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிக்க : மழைக்கு குட்பை.. தமிழகத்தில் இனி வறண்ட வானிலை தான்… வானிலை ரிப்போர்ட் இதோ!!

வெடிகுண்டு அழிக்கும் பணியில் ஈடுபட்ட காவலருக்கு ஏற்பட்ட சோகம்

இதற்காக, ஆய்வாளர் தங்கேஸ்வரன் தலைமையிலான குழு, இந்த வெடிகுண்டுகளை பரங்கிமலை அடிவாரத்தில் உள்ள ராணுவ ஃபையரிங் ரேஞ்ச் பகுதியில், மீனம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குள் கொண்டு சென்று பாதுகாப்பாக அழிக்கும் பணியில் ஈடுபட்டது. அனைத்து வெடிகுண்டுகளும் அழிக்கப்பட்ட பிறகு, சம்பவ இடத்தை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, ஒரு நாட்டு வெடிகுண்டு திடீரென பெரும் சத்தத்துடன் வெடித்தது.

இந்த வெடிப்பில் ஆய்வாளர் தங்கேஸ்வரனுக்கு முகம், கை மற்றும் உடல் பகுதிகளில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை மீட்ட சக போலீசார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிக்க : பெரம்பலூரில் ரெளடி மீது என்கவுண்டர் ஏன்? மத்திய மண்டல ஐ.ஜி. பரபரப்பு விளக்கம்!

இந்த சம்பவம் குறித்து, மீனம்பாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிபொருட்கள் அழிப்பு பணியின்போது எவ்வாறு இந்த விபத்து நிகழ்ந்தது, பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா? உள்ளிட்ட விவரங்கள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்புக்காக உயர் ஆபத்து நிறைந்த பணிகளில் ஈடுபட்டு வரும் காவல்துறையினரின் சேவையை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. வெடிகுண்டு சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் மிகுந்த பதற்றமடைந்தனர்.