தமிழகத்தில் இன்று முதல் ஏப்.17 வரை ஒருசில மாவட்டங்களில் மழை..வானிலை ஆய்வு மையம் தகவல்!

Tamil Nadu Weather Report Update | தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று முதல் ஏப்ரல் 17, 2026 வரை தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் ஏப்.17 வரை ஒருசில மாவட்டங்களில் மழை..வானிலை ஆய்வு மையம் தகவல்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

13 Apr 2026 06:35 AM

 IST

சென்னை, ஏப்ரல் 13 : தமிழகத்தில் (Tamil Nadu) இன்று (ஏப்ரல் 13, 2026) முதல் ஏப்ரல் 17, 2026 வரை ஒருசில மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai Meteorological Department) தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி  தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தின் வானிலை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் – வானிலை மையம்

ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக உள்ளது. வெயில் காரணமாக பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் 15, 2026 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தமிழகத்தை வட்டமிடும் பாஜக பருந்தை விரட்டியடிக்க வேண்டும்… மு. க. ஸ்டாலின் அழைப்பு!

ஒருசில மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும் நிலையில், இன்று முதல் ஏப்ரல் 17, 2026 வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : மீனவர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகள்… அள்ளி வீசிய தவெக தலைவர் விஜய்.. என்னென்ன உள்ளன!

மழை அறிவிப்பு – மகிழ்ச்சியில் மக்கள்

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி பகல் மற்றும் இரவு நேரங்களில் வெப்பம் சுட்டெரிக்கும் நிலையில், பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில், ஏப்ரல் 17, 2026 வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us
Related Stories
எனக்கு வேற வழி தெரியல ஆத்தா.. விஜய்யின் ஏஐ உருவத்துடன் வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்… தஞ்சாவூரில் விநோதம்!
தைரியமிருந்தால் கடிதத்தை வெளியிடுங்கள்.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி சவால்!
எதிர்க்கட்சிகள் விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி.. தமிழகத்துக்கு ரூ.14 லட்சம் கோடி நிதி.. புள்ளி விவரங்களை வெளியிட்ட மத்திய அரசு!
ஏப்.15-க்குள் பதில் அளிக்க வேண்டும்.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக வலியுறுத்தல்!
Tamil Nadu Election 2026 Live: தீவிர பிரசாரத்தில் தலைவர்கள்.. தமிழ்நாடு தேர்தல் செய்திகள்
கோடை விடுமுறைக்கு ரெடியா? போத்தனூரில் இருந்து சீறிப்பாயும் சிறப்பு ரயில்.. முழு தகவல் இதோ!
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?