திருப்போரூர் அருகே வெடித்து சிதறிய பயிற்சி விமானம்… பாராசூட் மூலம் உயிர் தப்பிய விமானிகள்
Air Force Plane Crash : சென்னை அருகே திருப்போரூரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் வானில் பறந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெடித்து சிதறியது. இதில் நல்வாய்ப்பாக விமானிகள் இருவரும் பாராசூட் உதவியுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நடுவானில் வெடித்து சிதறிய பயிற்சி விமானம்
சென்னை, நவம்பர் 14 : சென்னை (Chennai) அருகே திருப்போரூர் பகுதியில் நவம்பர் 14, 2025 அன்று இந்திய விமானப்படை பயிற்சி விமானம் (Aircraft) ஒன்று திடீரென வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதில் பயணித்த இரு விமானிகளும் பாராசூட் வசதியின் மூலம் உயிர்தப்பியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே நவம்பர் 14, 2025 அன்று காலை தாம்பரம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஒரு சிறிய ரக பயிற்சி விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் வானிலேயே விமானம் வெடித்து சிதறியது. இதனை முன்பே தெரிந்து கொண்ட விமானிகள் சாதுர்யமாக செயல்பட்டு பாராசூட் மூலம் உயிர் தப்பினர்.
வானில் வெடித்து சிதறிய விமானம்
திருப்போரூர் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விமானம் சில நொடிகளில் பலத்த சத்தத்துடன் வெடித்து விபத்துக்குள்ளானது. அப்போது விமானத்தின் பாகங்கள் சிதறி விழுந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். விமானம் வெடித்து சிதறிய சத்தம் அதிகமாக கேட்ட நிலையில், அருகிலுள்ள கிராமங்களில் உள்ளவர்கள் அச்சத்துடன் வீடுகளிலிருந்து வெளியே ஓடி வந்திருக்கின்றனர்.
இதையும் படிக்க : புதுக்கோட்டையில் திடீரென சாலையில் தரையிறங்கிய விமானம் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி – என்ன நடந்தது?
வெடித்து சிதறிய விமானத்தின் காட்சிகள்
VIDEO | Tamil Nadu: An Air Force training aircraft crashed near Thiruporur in Chengalpattu district. More details are awaited.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/SPPRXri1mO
— Press Trust of India (@PTI_News) November 14, 2025
விமானத்தில் இருந்த இரு விமானிகளும் விபத்து ஏற்படும் முன்பே பாராசூட்டின் உதவியின் மூலம் தங்களது உயிரைக் காப்பாற்றியுள்ளனர். இருவரும் பாதுகாப்பாக இறங்கியதாகவும், சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விபத்துக்கு குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சாலையில் தரையிறக்கப்பட்ட விமானம்
இதே போல நவம்பர் 13, 2025 அன்று புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே புதுக்கோட்டை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மற்றொரு சிறிய விமானம் அவசர தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் இதனால் பெரும் அதிர்ச்சியடைந்தனர். விமானம் தரையிறங்கிய இடத்தில் வாகனங்கள் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதையும் படிக்க : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. மழையால் குறையும் வெப்பநிலை.. சென்னையில் எப்படி?
விமானிகள் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் ஹிந்தியில் பேசியதால் விபத்துக்கான காரணம் குறித்து விசாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமான விபத்து நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இரண்டு விமான விபத்து சம்பவங்கள் அடுத்தடுத்த நாட்களில் நடைபெறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்துகள் பயிற்சி விமானங்களில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகள் குறித்து தீவிர விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.