போக்ஸோவில் கைதான எஸ்.எஸ்.ஐ… அவமானத்தால் எடுத்த விபரீத முடிவு… ஜாமீனில் வந்தபோது சம்பவம்!

Dharmapuri Crime: தர்மபுரி மாவட்டத்தில் போக்ஸோ வழக்கில் கைதாக ஜாமீனில் வந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் அவமானம் தாங்க முடியாமத்ல மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போக்ஸோவில் கைதான எஸ்.எஸ்.ஐ... அவமானத்தால் எடுத்த விபரீத முடிவு... ஜாமீனில் வந்தபோது சம்பவம்!

தர்மபுரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை

Published: 

28 Feb 2026 08:06 AM

 IST

தர்மபுரி மாவட்டம், வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சகாதேவன் ( 55 வயது). இவர், ஏரியூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். அந்த காவல் நிலையில் கடந்த 2023- ஆம் ஆண்டு பணிபுரிந்தபோது, காவல் நிலையத்தின் அருகே உள்ள வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த குழந்தையின் பெற்றோர் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறப்பு உதவி ஆய்வாளர் சகாதேவனை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருந்தார்.

குடும்பத்தினரிடம் அவமானம் தாங்காமல் அழுத எஸ் ஐ

இந்த நிலையில், முன்னாள் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சகாதேவன் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது, அவர் தனது குடும்ப உறுப்பினர்களிடம் போக்ஸோ வழக்கில் கைதானது அவமானமாக இருப்பதாக தனது மன வேதனை குறித்து பலமுறை முறையிட்டு அழுதுள்ளார். அவருக்கு, குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்தனர். இந்த நிலையில், சகாதேவன் சென்னை சென்று வருவதாக தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க: விஜய் தலையில் இடியை இறக்கிய சங்கீதா… நீதிமன்றத்தில் மனு தாக்கல்… பகீர் தகவல்!

மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த எஸ்ஐ

இந்த நிலையில், தர்மபுரி ரயில் நிலையம் அருகே மாந்தோப்பு என்ற இடத்தில் ஒரு நபர் மரத்தில் தூக்கிட்டு பிணமாக தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தருமபுரி டவுன் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் இருந்தவரை மீட்டு உடல் கூறாய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், தற்கொலை செய்து கொண்டது முன்னாள் சிறப்பு உதவி ஆய்வாளர் சகாதேவன் என்பது தெரிய வந்தது.

எஸ்ஐ தற்கொலையால் பெரும் பரபரப்பு

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட முன்னாள் சிறப்பு உதவி ஆய்வாளர் சகாதேவனுக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் சிறப்பு உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவமும், அவர் ஜாமீனில் வெளியாகி இருந்த நிலையில், அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எண்ணத்தை தடுக்க

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)

மேலும் படிக்க: தமிழகத்தை உலுக்கிய மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… மார்ச் 7- இல் வெளியாகிறது தீர்ப்பு!

Follow Us
Related Stories
மாம்பழம் சின்னம் முடக்கப்படுகிறதா? தேர்தல் ஆணையத்துக்கு சென்ற புகார்… பரிதவிப்பில் பாமகவினர்!
“அரசியலுக்கு வந்தால் தனிப்பட்ட வாழ்க்கையை தோண்டுவார்கள்”.. விஜய் குறித்து அண்ணாமலை பேச்சு!!
அதிமுக பிரமுகர் ஓட ஓட வெட்டி கொலை… பைக்கில் வந்த கும்பல் வெறிச்செயல்… முதல் கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்!
ஓடும் பேருந்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை… அதிர்ச்சியில் உறைந்த ஓட்டுநர்-நடத்துனர்… போலீசார் விசாரணை!
காங்கிரஸ் கேட்கும் 35 இடங்கள்.. இன்று நடக்கும் திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..
சென்னையில் வருகிறது ஸ்மார்ட் பாதுகாப்பு பெட்டகம்… 10 இடங்களில் அமைக்க திட்டம்… மாநகராட்சியின் சூப்பர் அறிவிப்பு!
குதிரை மேல் வந்து டெலிவரி செய்த ப்ளிங்கிட் ஏஜெண்ட்.. இணையத்தில் வைரல் காட்சிகள்..
நான்கு நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
11 மாத குழந்தையின் உயிரைக் காப்பாற்ற ஒன்றிணைந்த மக்கள்
செயல்படாத EPF கணக்குகள்.. தொழிலாளர் அமைச்சகம் முக்கிய முடிவு..