கல்லூரி மாணவிக்கு நள்ளிரவில் நேர்ந்த கொடூரம்.. தமிழகத்தையே உலுக்கும் திடுக் சம்பவம்!!

coimbatore College girl: கல்லூரி மாணவியை 3 இளைஞர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது ஆண் நண்பரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்லூரி மாணவிக்கு நள்ளிரவில் நேர்ந்த கொடூரம்.. தமிழகத்தையே உலுக்கும் திடுக் சம்பவம்!!

மாதிரிப்படம்

Updated On: 

03 Nov 2025 13:14 PM

 IST

கோவை, நவம்பர் 03: கோவையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள காலி மைதானத்தில் நேற்றிரவு 11 மணியளவில் கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த 3 பேர் கொண்ட கும்பல், இருவரும்  தனியாக இருப்பதை அறிந்து, அந்த மாணவரை கடுமையாக தாக்கவிட்டு மாணவியை வலுகட்டாயமாக தூக்கிச் சென்றுள்ளது. இதையடுத்து, தாக்குதலுக்கு ஆளான அந்த இளைஞர் காயங்களுடன் சென்று அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Also read: ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிவிட்ட சக பயணி.. பகீர் சம்பவம்!

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற போலீசார் மாணவியை தேடியுள்ளனர். அப்போது அருகில் இருந்த பகுதியில் நிர்வாணமான நிலையில் மாணவி மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அங்கிருந்து அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். படுகாயமடைந்த இளைஞரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த இளைஞரை அக்கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில், அவருக்கு பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்து, அவர்களிடம் நடந்த விசாரணையில், அந்த மாணவியை 3 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றது தெரிய வந்துள்ளது. படுகாயமடைந்த இளைஞர் மெக்கானிக் என்பதும், அவரும் கல்லூரி மாணவியும் நண்பர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

7 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை:

தொடர்ந்து, கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய அந்த கும்பலை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் தவீரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

Also read: உயிர் காக்க உதவும் ஆம்புலன்ஸே, இரு உயிர்களை பறித்த சோகம்!

அதோடு, அடையாளம் தெரியாத அந்த 3 பேர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த இக்கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

“கிரிக்கெட்டை தொடரவே விருப்பமில்லை என்று நினைத்தேன்”.. ஓய்வு குறித்து மனம்திறந்த ரோஹித் சர்மா!!
"பாம்பு சட்டை போல், உரிந்து வரும் தோல்".. விஷ சிலந்தி கடியால் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!!
எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கும் வாரணாசி படத்திற்கான பட்ஜெட் இவ்வளவா?
"இப்படியே அவரை வைத்திருக்க முடியாது".. கருணைக் கொலை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் முடிவு!!