வங்கி கணக்கில் ரூ.4,000 வரவு வைப்பு.. முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கொடுத்த இன்ப அதிர்ச்சி..

Rs.4000 deposited in bank account: தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக மகளிர் உரிமைத் தொகையை விடுவித்தது. தேர்தல் அறிவிக்கப்பட்டால், உதவித்தொகை வழங்கப்படுவது நிறுத்தப்படலாம் என்றும் காரணம் கூறியது குறிப்பிடத்தக்கது.

வங்கி கணக்கில் ரூ.4,000 வரவு வைப்பு.. முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கொடுத்த இன்ப அதிர்ச்சி..

முதல்வர் ஸ்டாலின்

Updated On: 

03 Mar 2026 11:46 AM

 IST

சென்னை, மார்ச் 03: பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2.58 லட்சம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா ரூ.4,000 இன்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதோடு, மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடித் தடைக்கால உதவித் தொகை ரூ.8,000 வரவு வைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை 1.62 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது. அதேபோல், முதியோர், கைம்பெண்கள் என மொத்தம் 29.29 லட்சத்து பயனாளிகளுக்கு தலா ரூ.3,200 வரவு வைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: அதிமுக – பாஜக கூட்டணியில் யாருக்கு யார் தலைமை என்றே தெரியாமல் உள்ளனர் – முதல்வர் மு.க ஸ்டாலின் விமர்சனம்..

முன்கூட்டியே உரிமைத் தொகை தந்து சர்ப்ரைஸ்:

முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடை கால சிறப்பு தொகை ரூ.2000 மற்றும் மார்ச், ஏப்ரம் மற்றும் மே மாதம் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகை ரூ.3000 என மொத்தமாக ரூ.5,000 மகளிர் உரிமைத் தொகை பெறும் அனைத்து பெண்களின் வங்கி கணக்கிலும் யாரும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக வரவு வைக்கப்பட்டது. தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக இத்தொகையை விடுவித்தது. தேர்தல் அறிவிக்கப்பட்டால், உதவித்தொகை வழங்கப்படுவது நிறுத்தப்படலாம் என்றும் காரணம் கூறியது.

இன்றும் முதல்வர் கொடுத்த இன்ப அதிர்ச்சி:

இந்நிலையில், தற்போது விளம்பு நிலையில் இருப்போருக்கு இன்ப அதிர்ச்சியாக, 40 லட்சம் பேருக்கு சிறப்பு நிதி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார். அதன்படி, முதியோர், கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகள் வங்கிக் கணக்கில் இந்த சிறப்பு நிதி வரவு வைக்கப்பட்டுள்ளது. 2.58 லட்சம் மாற்றுத் திறனாளின் குடும்பங்களுக்கு தலா ரூ.4,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. 5.92 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.3,500 வரவு வைக்கப்பட்டுள்ளது. முதியோர், கைம்பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.3,200 வரவு வைக்கப்பட்டுள்ளது.

விளிம்புநிலையில் இருப்போர்க்கு சிறப்பு நிதி:

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.

வங்கிக் கணக்கில் வரவு:

நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம். இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என மொத்தம் 29 இலட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும், 5 இலட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும், பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 இலட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4000 ரூபாயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம்.

மேலும் படிக்க: 2026 தேர்தலை நோக்கி ஆயிரம் விளக்கு தொகுதி.. திமுகவின் கோட்டை தொடருமா?

மீனவ குடும்பங்களுக்கு தலை ரூ.8,000:

அதுமட்டுமின்றி, மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன், தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ