கரூர் விவகாரம்…. நீதிபதியின் கருத்துக்கு விமர்சனம் – முன்னாள் காவல் அதிகாரி கைது

Karur Stampede : கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் விஜயக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நீதிபதி செந்தில் குமாருக்கு எதிராக கருத்து தெரிவித்த ஓய்வுபெற்ர காவல்துறை அதிகாரி வரதராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூர் விவகாரம்.... நீதிபதியின் கருத்துக்கு விமர்சனம் -  முன்னாள் காவல் அதிகாரி கைது

வரதராஜன்

Published: 

07 Oct 2025 14:51 PM

 IST

கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கரூர் கூட்டநெரிசல் சம்பவம் (Karur Stampede) மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் இது தொடரபான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. மேலும் விஜய்க்கு தலைமை பண்பு இல்லை என நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருந்தது. மேலும் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இருவரும் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இருவரது மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

முன்னாள் காவல் அதிகாரி கைது

இதனையடுத்து இருவரும் உச்சநீதிமன்றத்தில் தங்களுக்கு ஜாமின் கேட்டும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணையை அக்டோபர் 10, 2025 அன்று ஒத்தி வைத்தது. இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் அவருக்கு எதிராக ஓய்வுபெற்ற முன்னாள் காவல் அதிகாரி வரதராஜன் தனது யூடியூப் பக்கத்தில் நீதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையும் படிக்க : விஜய்க்கு உங்க அட்வைஸ் என்ன ? கரூரில் கமல்ஹாசன் சொன்ன கமெண்ட்

இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் அக்டோபர் 7,2025 அன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நேதாஜி மக்கள் கட்சி என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சியும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட மக்களுடன் வீடியோ காலில் பேசிய விஜய்

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் நடைபெற்று பத்துக்கும் மேற்பட்ட நாட்களாகும் நிலையில் விஜய் பாதிக்கப்பட்ட மக்களுடன் வீடியோ காலில் பேசி அவர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார். மேலும் கணவரை இழந்த பெண்ணிடம் பேசிய விஜய், தன்னால் இழப்பை ஈடு செய்ய முடியாது எனவும் ஒரு அண்ணனாக தன்னால் இயன்ற உதவிகளை செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் அறிவித்திருந்த நிலையில் விரைவில் அதனை வழங்க மாவட்ட செயலாளர்களுடன் பேச்சுவார்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : ’கரூர் துயரத்திற்கு அரசின் அலட்சியமே காரணம்’ பாஜக எம்.பிக்கள் குழு அறிக்கை

விஜய் தனது பரப்புரையை ஒத்திவைத்துள்ள நிலையில் அவர் நவம்பர் 22, 2025 அன்று முதல் மீண்டும் பரப்புரையில் ஈடுபடவுள்ளதாகவும் அதற்காக மாவட்ட செயலாளர்களுடன் பேச்சுவார்தைதயில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் கட்சியின் மறுகட்டமைப்பு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.