ஆளுநர் வருகை முதல் வெளியேறியது வரை என்ன நடந்தது…உரையை வாசிக்காதது ஏன்…கவர்னர் மாளிகை விளக்கம்!
Legislative Assembly Session: தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே ஆளுநர் ஆர். என். ரவி வெளியேறினார். இதற்கு என்ன காரணம் என்பது குறித்தும், தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் வாசிக்காமல் சென்றதற்கு கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது குறித்தும் பார்க்கலாம்.
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை ( ஜனவரி 20) கூடியது. இந்த கூட்டமானது ஆளுநர் உரையுடன் தொடங்க வேண்டும் என்பதால், தமிழக கவர்னர் ஆர். என். ரவி காலை 9:20 மணி அளவில் சட்டப்பேரவை வளாகத்துக்கு வருகை தந்தார். இதைத் தொடர்ந்து, அவரை சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு வரவேற்று சட்டமன்றத்துக்குள் அழைத்து சென்றார். ஆனால், உள்ளே சென்ற சிறிது நேரத்தில் ஆளுநர் ஆர். என். ரவி சட்டமன்ற கூட்டத்தில் இருந்து வெளியேறி தனது காரில் புறப்பட்டு சென்றார். ஆளுநர் வருகைக்கும், வெளியேறியதற்கும் இடையில் என்ன நடந்தது என்பதையும், கவர்னர் உரையை வாசிக்காமல் சென்றதற்கு என்ன காரண் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: “எங்களை மன்னித்து விடுங்கள் ஐயா”…தமிழக டிஜிபிக்கு 1500 போலீசார் கடிதம்…என்ன காரணம்!
- இன்று காலை சட்டமன்றத்துக்குள் ஆளுநர் வந்ததும் முதல்வர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று வணக்கம் செலுத்தினர்.
- முதல்வர் மு. க. ஸ்டாலினும், ஆளுநர் ஆர். என். ரவியும் ஒருவரை ஒருவர் பார்த்து வணக்கம் செலுத்திக்
கொண்டனர். - சரியாக 9:30 மணிக்கு தமிழ் தாய் வாழ்த்து பாடல் இசைக்கப் பட்டது.
- அதன் பிறகு தேசிய கீதம் இசைக்கப்படும் என்று ஆளுநர் ஆர். என். ரவி எதிர்பார்த்தார். ஆனால், இசைக்கப்படவில்லை.
- உடனே, சபாநாயகர் அப்பாவு எழுந்து தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் வாசிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
- இதற்கு, பதில் அளித்த ஆளுநர் ஆர். என். ரவி தமிழக அரசு (ம) சபாநாயகர் மீது எனக்கு வருத்தம் உள்ளது.
- அரசியலமைப்பின்படி, இருக்கக்கூடிய நடவடிக்கையை நீங்கள் ஏற்கவில்லை.
- பாராளுமன்றத்தில் தேசிய கீதம் இசைத்த பின்னர் கூட்டம் தொடங்கி நடைபெறும். அதேபோல, நீங்கள் பின்பற்றவில்லை. ஆகிய முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றது.
இந்த நிலையில், சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் வாசிக்காததற்கு காரணம் என்ன என்பது குறித்து ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,




- தமிழக அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையில் உண்மைக்கு மாறான பல தகவல்கள் உள்ளன.
- ஆளுநரின் மைக் பல்வேறு முறை ஆஃப் செய்யப்பட்டு பேசவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது.
- தமிழக அரசு தயாரித்து கொடுத்த பல்வேறு தகவல்களுக்கு ஆதாரங்கள் இல்லை.
- தமிழக சட்டமன்றத்தில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டுள்ளது.
- தமிழக அரசு ரூ.12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக உண்மைக்கு மாறான தகவல் இடம் பெற்றுள்ளது.
- பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற சம்பவங்கள் 55% ஆக அதிகரித்துள்ளது.
- தலித் பெண்களுக்கு எதிராக பாலியல் சம்பவங்கள் அதிகரித்துள்ள என்பன உள்ளிட்ட 13 காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர்…சிறிது நேரத்தில் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவி..முதல்வர் அறிவித்த தீர்மானம்!