கேரளாவில் வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள நீண்டபாற வனப்பகுதியில் திடீரென காட்டு தீ ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியிலிருந்து புகை மற்றும் தீப்பொறிகள் எழுந்ததை தொடர்ந்து, தகவல் அறிந்த வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீ வேகமாக பரவாமல் தடுக்க தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள நீண்டபாற வனப்பகுதியில் திடீரென காட்டு தீ ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியிலிருந்து புகை மற்றும் தீப்பொறிகள் எழுந்ததை தொடர்ந்து, தகவல் அறிந்த வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீ வேகமாக பரவாமல் தடுக்க தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வறண்ட காலநிலை காரணமாக தீ பரவியிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அருகிலுள்ள கிராம மக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வனப்பகுதிக்கு செல்ல தற்காலிக தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
