மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் சீன ‘மாஞ்சா கயிறு’ காரணமாக இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்ற மதபோதகர் ஒருவர் பலத்த காயமடைந்தார். அந்தக் கயிறு அவரது கழுத்தை கடுமையாக வெட்டியுள்ளது. இதில் அந்த மதபோதகர் வினய் திவாரி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதில், அவரது கழுத்து பகுதியில் ஆழமாக மாஞ்சா கயிறு சென்றுள்ளது. மருத்துவர்கள் சுமார் இரண்டு மணி நேரம் போராடி அவசர அறுவை சிகிச்சை மூலம் அதை நீக்கினர். தொடர்ந்து, 10 தையல்கள் போட்டு காயத்தை அடைத்தாக மருத்துவர்கள் கூறினர். இந்த சிகிச்சை தாமதமானால், உயிருக்கே மிக அபாயமாக முடிந்திருக்கும் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.