அரிதான தீர்ப்பாக, 1974ஆம் ஆண்டு பதிவான ஒரு திருட்டு வழக்கில், சம்பவம் நடந்த 51 ஆண்டுகளுக்குப் பிறகு புனே நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை விடுதலை செய்துள்ளது. ஆதாரங்களின் பற்றாக்குறை மற்றும் சாட்சிகள் இல்லாமை காரணமாக இந்த விடுதலை வழங்கப்பட்டது. 1974 மார்ச் 14 அன்று, புனேயின் பண்ட் கார்டன் காவல் நிலையத்தில் திருட்டு புகார் பதிவு செய்யப்பட்டது. ரூபாய் 60 மதிப்புள்ள வாட்ச், ரூபாய் 4 பணம் மற்றும் ஒரு கைக்குட்டையை மூன்று பேர் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் இருவர் 1975ஆம் ஆண்டு தண்டனை பெற்றனர்.