எல்லைகளைக் காக்கும் இந்திய ராணுவ வீரர்கள் எதிரிகளுக்கு எவ்வளவு சிம்ம சொப்பனமாக விளங்குவார்களோ, அதே அளவு சாமானிய மக்களிடம் மிகுந்த அன்பும் மனிதாபிமானமும் கொண்டவர்கள் என்பதை நிரூபிக்கும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு ரயில் நிலையத்தில் வயதான மூதாட்டி ஒருவர் தான் கையால் செய்த சமோசாக்களை விற்பதற்காக பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்தார்.