‘மீண்டும் திமுக வந்தால் தவெக கதி அவ்வளவு தான்’ – ஆர்.பி.உதயகுமார்!

AIADMK - Tamilaga Vettri Kazhagam: 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழக வெற்றிக் கழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும், நடிகர் விஜய் அ.தி.மு.க-வுடன் பயணிக்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.

‘மீண்டும் திமுக வந்தால் தவெக கதி அவ்வளவு தான்’ - ஆர்.பி.உதயகுமார்!

ஆர்.பி.உதயகுமார் - விஜய்

Updated On: 

22 Oct 2025 08:23 AM

 IST

மதுரை, அக்டோபர் 22: 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழக வெற்றிக் கழகம் கட்சியைக் காப்பாற்ற முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள மூத்தீஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை முன்னிட்டு பக்தர்களுக்கு நேற்று (அக்டோபர் 21) அன்னதானம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் திமுக அரசை சரமாரியாக விமர்சித்தார். அவர் தனது பேட்டியில், ‘திமுக அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது. சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாமல் மக்களுக்கும் நடைபெறும் ஆட்சிக்கும் வித்தியாசம் இருக்கிறது’ என கூறினார்.

அம்பலமான திமுக அரசின் பொய்

மேலும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தனது சமூக வலைதள பக்கத்தில், ‘தைவான் நாட்டைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார். தொடர்ந்து ரூபாய் 15,000 கோடி மதிப்பீட்டில் பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்கிறது. இதன் மூலம் 14,000 பேருக்கு வேலை கிடைக்கப் போகிறது. எல்லோரும் தயாராக இருங்கள்’ என தெரிவித்திருந்தார்.

Also Read:  விளம்பர வெளிச்சம்.. திமுக அரசை விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்!

முதலமைச்சர் ஸ்டாலின் இன்னும் ஒரு படி மேலே சென்று, ‘இது திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என்றும், தெற்கு ஆசியாவில் உற்பத்தியின் புதுமை மையமாக தமிழ்நாடு உள்ளது’ எனவும் கூறினார். ஆனால் பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் தாங்கள் புதிய முதலீடு செய்யவில்லை என கூறி அதிர்ச்சி கொடுத்தது என தெரிவித்தார்.  கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பது போல திமுகவின் புளுகு அரை நாளில் அம்பலமானது.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினால் பாகிஸ்தான் நிறுவனத்தின் வேறு நிறுவனம் முதலீடு செய்துள்ளது என அமைச்சர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வகையில் பதில் அளிக்கிறார் என ஆர்.பி.உதயகுமார் விமர்சித்தார்.

விஜய்க்கு நல்ல வாய்ப்பு

தொடர்ந்து கரூர் சம்பவம் பற்றி பேசிய அவர், இந்த விவாகரத்தில் சிபிஐ விசாரணை மூலம் சதிக்கு காரணம் யார் என்பதை தெளிவாக தெரிய வரும். ஏற்கனவே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அனைவரது சந்தேக பார்வை உள்ளது. விஜய் பாட்டிலுக்கு பத்து ரூபாய் என பாடும் போது தான் அவர் மீது செருப்பு விழுந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து விஜய் 2026 சட்டமன்றத்தில் தேர்தலை  மனதில் கொண்டு நல்ல முடிவை எடுப்பார் என மக்களும் அவரது தொண்டர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

Also Read:  விஜயகாந்த் போல விஜய் – டிடிவி தினகரன் சொன்ன விஷயம்

அவருக்கு நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. அதன் கை நழுவ விடக்கூடாது. 54 ஆண்டுகள் மக்கள் செல்வாக்கு பெற்று, 31 ஆண்டுகள் ஆட்சியில் அதிகாரத்தில் இருந்து மக்களுக்கு சேவை செய்த அதிமுகவுடன் அவர் பயணப்பட வேண்டும். ஒருவேளை மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழக வெற்றிக் கழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது எனவும் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.