தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும் – உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் மனு – என்ன காரணம்?

TN Assembly Elections : தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர்நதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை பிப்ரவரி 20 அன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும் - உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் மனு  - என்ன காரணம்?

ராமதாஸ்

Updated On: 

19 Feb 2026 21:04 PM

 IST

சென்னை, பிப்ரவரி 19 : பாமக தலைவராக தன்னை பதிவு செய்யும் வரை தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு பிப்ரவரி 20, 2026 அன்று விசாரணைக்கு வரவிருக்கிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. தேர்தல் தேதிகள் மார்ச், 2026 அன்று துவக்கத்தில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் பாமக இடையே ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே அதிகாரப்போட்டி நிலவி வருகிறது.

‘தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும்’

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இறங்கியுள்ளன. இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தல் தொடர்பான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. மேலும் மார்ச் 2026 முதல் வாரத்தில் தேர்தல் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் மார்ச் 26, 27, 2026 ஆகிய தேதிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தமிழகம் வரவுள்ளார்.

இதையும் படிக்க : திமுகவிடம் 10+1 தொகுதிக்கான பட்டியலை அளித்த தேமுதிக… எந்தெந்த தொகுதிகள் தெரியுமா!

இந்த சூழலில் தமிழ சட்டமன்ற தேர்தல் தேதி வெளியிடும் அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிப்பை தள்ளி வைக்க வேண்டும். பாமக தலைவராக தன்னை பதிவு செய்யும் வரை தேர்தல் அறிவிப்பை சிறிது காலம் கழித்து வெளியிட வேண்டும். தற்போதைய சூழலில் தேர்தல் தேதி வெளியிடப்பட்டால் மாம்பழம் சின்னம் முடக்கப்பட வாய்ப்புள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் பிப்ரவரி 20, 2026 அன்று விசாரணைக்கு வரவுள்ளது.

பாமகவில் யார் தலைவர் என்ற அதிகார போட்டி நிலவி வருகிறது. பாமகவின் தலைவர் அன்புணி உறுதி செய்ததுடன் அவருக்கு கட்சியின் சின்னமான மாம்பழம் சின்னமும் ஒதுக்கப்பட்டது. பாமகவின் தலைவர் பதவி முடிந்துவிட்டதாக ஏற்கனவே டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தங்களிடம் உள்ள ஆவணங்களின் படி அன்புமணி தான் பாமக தலைவர் என தேர்தல் ஆணையம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க : “நிறைவேறிய விஜயகாந்த் விருப்பம்”..நெகிழ்ந்த பிரேமலதா.. பெரு மகிழ்ச்சி தெரிவித்த ஸ்டாலின்..

இது ராமதாஸ் தரப்பிற்கு பின்னடைவாக அமைந்தது.  இதனையடுத்து பாமகவில் ராமதாஸ் தலைமையிலும், அன்புமணி தலைமையிலும் இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கிறது.

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?