அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஓவர் கோட் கட்டாயம்.. புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு!
Puducherry Government : புதுச்சேரியில் 6 முதல் 12ஆம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவிகள் சுடிதார் மீது ஓவர் கோட் அணிய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு, சுடிதார் மீது துப்பட்டா அணிந்து வந்த நிலையில், தற்போது சீருடையில் புதுச்சேரி அரசு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

மாணவிகள்
புதுச்சேரி, ஆகஸ்ட் 08 : புதுச்சேரியில் அரசுப் (Puducherry Government) பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் (Puducherry Goverment School) ஓவர் கோட் அணிய வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஓவர்கோட் சீருடை மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் என கருதப்படுகிறது. இதனை அடுத்து, புதுச்சேரி அரசுப் பள்ளி சீருடையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவிகள் சுடிதார் மீது ஓவர் கோட் அணிய உத்தரவிட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களில் ஒன்றாக இருப்பது புதுச்சேரி. தமிழகத்தில் அருகே இந்த மாநிலம் அமைந்துள்ளது. புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி இருந்து வருகிறது. புதுச்சேரியின் உட்கட்டமைப்பை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், தமிழகத்தை போன்று பல்வேறு திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
அண்மையில் கூட, புதுச்சேரியில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 அறிவிக்கப்பட்டது. இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் இருப்பது போன்று கொண்டு வரப்பட்டு வருகிறது. குறிப்பாக, கல்வித்துறையை மேம்படுத்தவும் புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், தற்போது முக்கிய அறிவிப்பை புதுச்சேரி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதாவது, புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் ஓவர் கோட் அணிய வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Also Read : ஆகஸ்ட் 7ல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. தென்காசி ஆட்சியர் அறிவிப்பு!
புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஓவர் கோட் கட்டாயம்
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவிகள் சுடிதார் மீது ஓவர் கோட் அணியும் நடைமுறை உள்ளது. இதனை பின்பற்றி, புதுச்சேரி அரசு 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் சுடிதார் மீது ஓவர் கோட் அணிய வேண்டும் என கல்வித்துறை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்கு முன்பு, சுடிதார் மீது துப்பட்டா அணிந்து வரும் நிலையில், தற்போது புதுச்சேரி அரசுப் பள்ளி சீருடையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. சுடிதார் மீது ஓவர் கோட் அணிவது மாணவிகளுக்கு பாதுகாப்பானதாக கருதி, அந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
Also Read : பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
இது தொடர்பாக, அனைத்து பள்ளிகளுக்கு சுற்றரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், “அரசுப் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவிகள் சுடிதார் மீது ஓவர் கோட் அணிய வேண்டும். இதற்காக வடிவமைப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர்களை சந்தித்து ஓவர் கோட் வடிவம் குறித்து தெரிவிப்பார்கள். இதனை மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் தெரிவித்து ஓவர் கோட் தைக்க அறிவுறுத்த வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.