AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி திடீர் பலி –  காவல்துறையினர் விசாரணை

கோவை மத்திய சிறையில் இருந்த மணி என்ற கைதிக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் சிறை அதிகாரிகள் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலம் இல்லாமல் மணி என்ற மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி திடீர் பலி –  காவல்துறையினர் விசாரணை
மாதிரி புகைப்படம்
Sekaran S
Sekaran S | Published: 16 Jun 2026 10:27 AM IST

கோயம்புத்தூர், ஜூன் 16 : கோவை மத்திய சிறைச்சாலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில் ஆயுத தண்டனை உள்ளிட்ட தண்டனை பெற்றவர்களும் விசாரணை கைதிகளும் அடக்கம்.  சிறைச்சாலையில் கைதிகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிறைச்சாலை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் வசதி உள்ளது.  அதே நேரத்தில் அவர்களுக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். அங்கு கைதிகளுக்கு என்று தனியாக அறை உள்ளது. அங்கு அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படும்.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி திடீர் பலி

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள சவுரிகாடு, வடகவுஞ்சி கிராமத்தைச் சேர்ந்த மணி என்ற மணிகண்டன் (வயது 55) என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பெருந்துறையில் நடந்த கொலை  வழக்கில் ஈரோடு நீதிமன்றம் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் கோவை மத்திய சிறையில் இருந்த அவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் சிறை அதிகாரிகள் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மணி என்ற மணிகண்டன் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு காவல்துறை பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலம் இல்லாமல் மணி என்ற மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மத்திய சிறைச்சாலை சிறை வார்டன் தாமரைக்கனி கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு புகார் அளித்தார்.  அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்து மணிகண்டன் உயிரிழப்பு குறத்து விசாரணை நடத்தி வருகிறார்.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கைதி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல திருப்பூர் மாவட்டத்திலும் கார் விற்பனை செய்வது போல 2 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்து உள்ளார். இந்த வழக்கில் பிம்முடு அஜித் குமாரை திருப்பூர் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். கோவை மத்திய சிறையில் கடந்த வாரம் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் உடல்நிலை சரியில்லை என கூறியதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் , கோவை மத்திய சிறையில் இருந்து கோவை அரசு மருத்துவமனையில் கைதிகள் வாட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கோவை அரசு ஆஸ்பத்திரி வார்டில் இருந்து பிம்முடு அஜித் குமார் தப்பி ஓடினார். இந்த சம்பவத்தில் அவர் தப்பிக்க உதவியாக இருந்த கார் ஓட்டுநர் விஜயகுமார் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த இரண்டாம் நிலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

 

Follow Us