மதுராந்தகத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு – மேடையில் இருந்த தலைவர்கள் யார்?

Prime Minister Narendra Modi : தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியை கூட்டணி கட்சித் தலைவர்கள் இணைந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுராந்தகத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - மேடையில் இருந்த தலைவர்கள் யார்?

கூட்டணி கட்சித் தலைவர்கள் அன்புமணி ராமதாஸ், எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் நரேந்திர மோடி

Updated On: 

23 Jan 2026 15:51 PM

 IST

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) ஜனவரி 23, 2026 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இக்கூட்டணியின் வலிமையை வெளிப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இந்த பொதுக்கூட்டத்தில், பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ள பாமக மற்றும் அமமுக கட்சிகளும் பங்கேற்கின்றன. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்பு உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமாகா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் மேடையில் கலந்து கொள்ள உள்ளனர்.

இதையும் படிக்க : ‘அதிமுக உடனான கூட்டணியால் அதிருப்தி’.. திமுகவில் இணைந்த அமமுக துணை பொதுச்செயாலளர்..

பிரதமர் மோடிக்கு கூட்டணி கட்சித் தலைவர் உற்சாக வரவேற்பு

பிரதமர் மோடி, ஜனவரி 23, 2026 அன்று பிற்பகல் கேரள மாநிலம் திருவணந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, சென்னை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் பொதுக்கூட்ட மேடையை அடைந்தார். அவருக்கு எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சித்தலைவர் உற்சாக வரவேற்பு  அளித்தனர். பொதுக்கூட்ட மேடையில் அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி, ஜிகே வாசன், அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் இடம்பெற்றிருந்தனர்.

பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இணைந்து பங்கேற்கிறார். பொதுக்கூட்டம் முடிவடைந்த பின்னர், மாலை 5 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்பட உள்ளார்.

இதையும் படிக்க : அதிமுக – பாஜக கூட்டணி.. பாமக, அமமுகவிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் எத்தனை?

இந்நிலையில், தனது வருகை தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் நிற்கிறது. இன்று பிற்பகல் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி தலைவர்களுடன் நான் இணைகிறேன். ஊழல் நிறைந்த திமுக அரசுக்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டதாக தமிழ்நாடு முடிவு செய்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சாதனைகளும், மாநில மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அளிக்கும் முக்கியத்துவமும் மக்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பொதுக்கூட்டம், தமிழக அரசியலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு முக்கிய தொடக்கமாகக் கருதப்படுவதால், அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்து ரசித்த இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்..
பொது சொத்துக்களை மதிக்கும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.. வந்தே பாரத் ரயில் குறித்த வைரல் போஸ்ட்..
ஐசிசி உலகக் கோப்பை 2026.. ஐசிசியின் எச்சரிக்கை.. வங்கதேசத்தின் இறுதி பதில்
குட்டியை காப்பாற்ற தாய் குரங்கு செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..