மகன் மரணத்தில் நாடகம்.. போலீசாரையே குழப்பிய தாய்.. கடைசியில் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் சிக்கினார்!

Chennai Boy Murder : சென்னையில் 6 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதில், பெற்ற தாயே துப்பட்டாவால் சிறுவனை கொலை செய்த சம்பவம் பிரேத பரிசோதனை அறிக்கை மூலமாக வெளியே வந்து உள்ளது.

மகன் மரணத்தில் நாடகம்.. போலீசாரையே குழப்பிய தாய்.. கடைசியில் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் சிக்கினார்!

மகனை கொலை செய்த தாய் கைது

Updated On: 

06 May 2026 08:06 AM

 IST

சென்னை மாவட்டம், வியாசர்பாடியை சேர்ந்தவர் வீர செல்வம். இவரது மனைவி சிவரஞ்சனி. இவர்களுக்கு கிருஷ்ணன் ( 6 வயது), மித்ரன் என இரண்டு மகன்கள் இருந்தனர். கிருஷ்ணன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மே 3- ஆம் தேதி காலை நீண்ட நேரம் ஆகியும் கிருஷ்ணன் தூக்கத்தில் இருந்து எழும்பவில்லை என்று கூறப்படுகிறது. உடனே, சிறுவனின் தந்தை வீர செல்வம் தனது மகனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு, சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு, வீரசெல்வம் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இது தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் வீர செல்வம் புகார் அளித்தார். அதில், தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி இருந்ததாக தெரிகிறது. அதன்படி, போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி

இந்த நிலையில், சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறுவன் கிருஷ்ணன் கழுத்து நெறிக்கப்பட காரணத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, சந்தேக மரண வழக்கை வியாசர்பாடி போலீசார் கொலை வழக்காக மாற்றி கிடுக்கி பிடி விசாரணையே மேற்கொண்டனர். இதில், சிறுவனின் தாய் சிவரஞ்சனி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

மேலும் படிக்க: ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்.. ஓமன் டூ திருப்பத்தூர் வந்த நபரின் பதிவு வைரல்!

தாய் சிவரஞ்சனி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்

அதன் பேரில், சிவரஞ்சினியே போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இதில், சிவரஞ்சனி போலீசாரிடம் அதிர்ச்சி அளிக்கும் வாக்குமூலத்தை அளித்தார். அதில், கடந்த மே 2- ஆம் தேதி இரவு சிறுவன் கிருஷ்ணன், தனது தம்பி மித்திரனின் கழுத்தில் அணிந்திருந்த சாமி கயிற்றை பிடித்து இறுக்கி விளையாடிக் கொண்டிருந்தான். இதை பார்த்த, சிவரஞ்சனி கண்டித்துடன், மித்திரனுக்கு கழுத்து எவ்வளவு வலிக்கும் என்பதை உணர்த்துவதற்காக, மூத்த மகன் கிருஷ்ணனின் களத்தில் துப்பட்டாவை போட்டு விளையாட்டுத்தனமாக இறுக்கி உள்ளார்.

பெற்ற மகனை தாய் கொலை செய்த சம்பவம்

இதில், சிறுவன் கிருஷ்ணனுக்கு கடும் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி உள்ளார். உடனே, சிறுவனை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு எதுவும் தெரியாதது போல இருந்துள்ளார். மறுநாள் காலையில் சிறுவன் இறந்தது தெரிந்ததும் அதனை மறைத்து விட்டு சிவரஞ்சனி நாடகமாடியுள்ளார். இதைத் தொடர்ந்து, சிவரஞ்சனியே போலீசார் கைது செய்தனர். பெற்ற மகனை தாயே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: விஜய் அமைச்சரவையில் யார்.. யார்.. இடம் பெறுவார்? தவெக பதவியேற்பு விழா எப்போது!

Follow Us
Related Stories
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..