பரபரக்கும் தமிழக தேர்தல் களம்.. ஜனவரியில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
PM Modi To Visit Tamil Nadu In January 2026 | 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக இயங்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி ஜனவரியில் தமிழகத்திற்கு வர உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி
புதுடெல்லி, டிசம்பர் 16 : தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் (Tamil Nadu Assembly Election) நடைபெற உள்ளது. இதன் காரணமாக திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மத்தியில் ஆளும் பாஜகவும், இந்த தேர்தலில் எப்படியாவது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற முடிவுடன் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பாஜக தலைவர்கள் மக்களை சந்தித்து தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட தொடங்கியுள்ளனர். அந்த வகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரில் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரியில் தமிழகம் வருகிறார் இந்திய பிரதமர் மோடி
தமிழகத்தில் ஒவ்வொரு முறை தேர்தல் நடைபெறும்போதெல்லாம், பிரதமர் மோடி மூன்று முறையாவது தமிழகத்திற்கு வந்து விடுவார். அந்த வகையில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடியின் முதல் தமிழக வருகை ஜனவரியில் நடைபெற உள்ளது. அவ்வாறு ஜனவரியில் தமிழகம் வரும் பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ள காசி தமிழ் சங்கத்தின் நிறைவு விழா, விவசாயிகளை சந்திக்கும் நிகழ்ச்சி மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் யாத்திரை நிரைவு விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க : தேமுதிக எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும்? அதன் நிலைப்பாடு என்ன!
தள்ளி போகும் காசி தமிழ் சங்கம் விழா?
காசி தமிழ் சங்கத்தின் நிறைவு விழா 2025, டிசம்பர் மாத இறுதியில் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், பிரதமர் மோடி 2025, ஜனவரி மாதத்தில் தமிழகத்திற்கு வர திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு ஏற்ப காசி தமிழ் சங்க விழா தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுகிறது. அதுமட்டுமன்றி, விவசாயிகளை சந்திப்பது உள்ளிட்ட நிகழ்வுகளையும் அன்றைய தினமே நடத்தவும் பாஜக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : தமிழகத்தில் குறையும் வெப்பநிலை.. அதிகரிக்கும் பனிப்பொழிவு.. வரும் நாட்களில் எப்படி இருக்கும்?
அவ்வாறு பிரதமர் மோடி வருகை தள்ளிப்போகும் பட்சத்தில் காசி தமிழ் சங்கம் நிறைவு விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா களந்துக்கொண்டு, அதன் பிறகு ஜனவரியில் பிரதமர் மற்ற விழாக்களில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.