AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எதிர்ப்பை மீறி காதலனுடன் சென்ற மகள்.. விஷம் குடித்து விபரீத முடிவு எடுத்தா பெற்றோர்.. ஷாக் சம்பவம்!

Parents End Their Life Due To Daughter's Love | ஈரோட்டில் சோனா என்ற பெண் தன்னுடன் பணியாற்றும் நபரை காலித்து வந்த நிலையில், அதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த நிலையில், சோனா தனது காதலன் உடன் சென்ற நிலையில், அவர்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.

எதிர்ப்பை மீறி காதலனுடன் சென்ற மகள்.. விஷம் குடித்து விபரீத முடிவு எடுத்தா பெற்றோர்.. ஷாக் சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Apr 2026 11:57 AM IST

கோபிச்செட்டிப்பாளையம், ஏப்ரல் 13 : ஈரோடு (Erode) மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள நாகர்பாளையம் சக்தி கார்டன் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ்வரன். 45 வயதான இவர் அச்சக டிசைனராக இருந்து வந்தார். இவருக்கு 40 வயதில் சந்திரா என்ற மனைவியும் இருந்துள்ளார். அவர், அத்தாணி மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக பணியாற்றி வந்துளார். இந்த தம்பதிக்கு சோனா என்ற மகளும் பாஜாகி என்ற மகளுக் உள்ளனர்.

மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்

இந்த நிலையில் இவர்களின் மகள் சோனா, கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கட்டிட வடிவமைப்பாளராக வேலை செய்து வருகிறார். அவர் பணிபுரியும் அதே நிறுவனத்தில் சேலத்தை சேர்ந்த தாமோதரன் என்பவரும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சோனாவுக்கு தாமோதரன் உடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இவர்களது காதல் விவகாரம் சோனாவின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், அவர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : ஏப்.15-க்குள் பதில் அளிக்க வேண்டும்.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக வலியுறுத்தல்!

எதிர்ப்பை மீறி காதலனுடன் சென்ற மகள்

சோனாவின் பெற்றோர், அவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமன்றி தற்கொலை செய்துக்கொள்வோம் என்றும் மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். ஆனால், சோனா காதலனை திருமணம் செய்துக்கொள்ளும் முடிவில் உறுதியாக இருந்துள்ளார். இதற்கிடையே சோனாவின் வீட்டிற்கு சென்ற தாமோதரன் திருமணம் செய்துக்கொள்ளலாம் என அவரை அழைத்துச் சென்றுள்ளார். தங்களின் கண் முன்னே மகள் காதலன் உடன் சென்ற நிலையில், மனமுடைந்த தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இதையும் படிங்க : கோடை விடுமுறைக்கு ரெடியா? போத்தனூரில் இருந்து சீறிப்பாயும் சிறப்பு ரயில்.. முழு தகவல் இதோ!

அவர்கள் இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை சிகிச்சைக்காக கோயம்புத்தூர்  அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இருவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இத விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us