ரயில் திட்டங்கள் தாமதத்திற்கு தமிழக அரசே காரணம்: முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதில்

Railway Project Row : தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு போதிய அளவில் இல்லை என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் நிலம் கையகப்படுத்தப்படாததே என்று அவர் விளக்கமளித்தார்.

ரயில் திட்டங்கள் தாமதத்திற்கு தமிழக அரசே காரணம்: முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதில்

அஷ்வினி வைஷ்ணவ் - மு.க.ஸ்டாலின்

Published: 

09 Feb 2026 20:07 PM

 IST

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு போதிய அளவில் இல்லை என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் (MK Stalin) குற்றச்சாட்டுக்கு, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கட பதிலளித்துள்ளார். தமிழ் நாட்டில் ரயில்வே திட்டங்கள் தாமதமாவதற்கு முக்கிய காரணம் நிலம் கையகப்படுத்தப்படாததே என்றும், மத்திய அரசுக்கும் இதற்கும் துளியும் காரணம் இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தில், ரயில்வே திட்டங்களுக்கு நிதி தேவை என கோரிக்கைவிடுத்திருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அஷ்வினி வைஷ்ணவ் விரிவான தகவல்களை முன்வைத்துள்ளார். அதில், மத்திய அரசு நிதி வழங்க முழுமையாக தயாராக உள்ளது என்றும் ஆனால் மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரயில்வே திட்டங்கள் தாமதமாதவற்கு காரணம் என்ன?

இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் தனது எக்ஸ் பதிவில், தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ரயில்வே திட்டங்களுக்கு மொத்தம் 4,326 ஹெக்டேர் நிலம் தேவை. அதில் 1,052 ஹெக்டேர் நிலம் மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இது மொத்த தேவையில் வெறும் 24% மட்டும் தான். இது தான் தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்கள் முடங்கியதற்கான முக்கிய காரணம். நிதி பற்றாக்குறை என சொல்வது அடிப்படை ஆதாரமற்றது என்றார்.

இதையும் படிக்க : எந்த ஊருடா… வட மாநில பணியாளர் மீது காவலர் தாக்குதல்… வைரலாகும் வீடியோ – அண்ணாமலை கண்டனம்

மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவின் எக்ஸ் பதிவு

 

  • நிலம் வழங்கப்படாததால் பாதிக்கப்பட்டுள்ள ரயில்வே திட்டங்களையும் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பட்டியலிட்டுள்ளார்.
  • அதன் படி மதுரை – அருப்புக்கோட்டை – தூத்துக்குடி இடை 144 கி.மீ தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தில் இதுவரை 91% நிலம் கூட இன்னும் கையகப்படுத்தப்படவில்லை.
  • திண்டிவனம் – திருவண்ணாமலை இடையே 71.33 கி.மீ தூரத்துக்கு 86 சதவிகிதம் நிலம் கூட இன்னும் வழங்கப்படவில்லை.
  • கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ராமேஸ்வரம் – தனுஷ் கோடி இடையே ரயில் பாதை அமைக்க இன்று வரை நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்கவில்லை.

இதையும் படிக்க : தமிழகத்தை உலுக்கிய கிட்னி திருட்டு விவகாரம்…கொடூர சம்பவத்தில் மறைந்திருக்கும் மக்களின் சோக கதை!

ரயில்வே ஒதுக்கிய பட்ஜெட் விவரங்கள்

மேலும் அவர் தனது பதிவில் மத்திய அரசின் முயற்சிகளை சுட்டிக்காட்டிய அஷ்வினி வைஷ்ணவ், 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்திற்கு ரயில்வே பட்ஜெட் 8.5 மடங்கு அதிகரிக்கப்பட்டு, 2026–27 ஆம் ஆண்டில் ரூ. 7,611 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், 1,350 கி.மீ புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட திட்டமிடப்பட்டு, அதில் 18 பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும், வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் என தலா 9 ஜோடி ரயில்கள் செயல்பாட்டில் உள்ளன.

Related Stories
குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் மீண்டும் எப்போது நடைபெறும்? வெளியான அறிவிப்பு
அன்புமணிக்கு தான் பாமக தலைவர் – தேர்தல் ஆணையம் மீண்டும் உறுதி
விசாரணைக்கு சென்ற போலீசாரை கடுமையாக தாக்கிய இளைஞர்கள் – 5 பேர் கைது – பரபரப்பு தகவல்
ராணிப்பேட்டையில் ரூ.9,000 கோடி மதிப்பில் திறக்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் ஆலை.. உலக முதலீடுகளுடன் போட்டியிடும் தமிழ்நாடு – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..
எந்த ஊருடா… வட மாநில பணியாளர் மீது காவலர் தாக்குதல்… வைரலாகும் வீடியோ – அண்ணாமலை கண்டனம்
நெருங்கும் காதலர் தினம்…காத்திருக்கும் காதலர்கள்…சூடுபிடிக்க தொடங்கியது ஓசூர் ரோஜா பூக்கள் விற்பனை!
150 கோடி வசூல்.. ட்ரெண்டிங்கில் இருக்கும் சர்வம் மாய..
லெஜெண்ட் சரவணனின் புதிய படம்.. வெளியான லீடர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
சென்னையில் தீவிரமாக பரவும் பறவைக் காய்ச்சல் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மோடிஜி என் சகோதரனை மீட்டுத்தாருங்கள் - நடிகை ஜெலினா ஜெட்லி கண்ணீர் மல்க உருக்கம்