+1 பொதுத்தேர்வு ரத்து.. 8ம் வகுப்பு வரை ஆல்பாஸ்.. வெளியான முக்கிய அறிவிப்பு!
State Education Policy : தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படும் என மாநில கல்விக் கொள்கைளியில் அறிவிக்கப்பட்டுள்ளது. 10,12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை தொடரும் எனவும் மாநில கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து
சென்னை, ஆகஸ்ட் 08 : பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை (State Education Policy) தமிழக முதல்வர் ஸ்டாலின் (CM MK Stalin) 2025 ஆகஸ்ட் 8ஆம் தேதியான இன்று வெளியிட்டார். அதில், தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு (Tamil Nadu 11th Board Exam) ரத்து செய்யப்படும் என மாநில கல்விக் கொள்கைளியில் அறிவிக்கப்பட்டுள்ளது. 10,12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை தொடரும் எனவும் மாநில கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில கல்விக் கொள்கையை உருவாக்க 2022ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் தங்களது பரிந்துரைகளை வழங்கியது. இந்த நிலையில், தற்போது மாநில கல்விக் கொள்கை அறிக்கை வெளியாகி உள்ளது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
Also Read : அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஓவர் கோட் கட்டாயம்.. புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு!
மாநில கல்விக் கொள்கையின்படி, நடப்பு கல்வியாண்டு (2025-26) முதலே, தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட உள்ளது. இதனால், இனி 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. அதேபோல, 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம், தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைத்த 3,5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை நிராகரிக்கப்பட்டுள்ளது.
மாநில கல்விக் கொள்கையில் வெளியான அறிவிப்புகள்
தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு… pic.twitter.com/qKVQHuCDLv
— Tamil Nadu School Education Department (@tnschoolsedu) August 8, 2025
மேலும், தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம என இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என மாநில கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செயற்கை நுண்ணறிவு, அறிவியில் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றிற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலின் கீழ் மீண்டும் கொண்டுவரவும் பரிந்துரைத்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு செயல்படுத்த முயற்சித்து வருகிறது. ஆனால், தமிழ்நாடு இருமொழிக் கொள்கையே பின்பற்றும் என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். இதனால், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்விநிதிய மத்திய அரசு தராமல் மறுத்து வருகிறது.
Also Read : பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான், ரூ.2,152 கோடியை விடுவிப்பதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார். இதனால், இருமொழிக் கொள்கை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுக்கு கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்த சூழலில், மாநில கல்விக் கொள்கையை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.