அதிமுகவை படுபாதாளத்தில் தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி, அவருக்கு சரியான பாடம் புகட்டுவோம்… – ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்

OPS Remarks on EPS: சென்னையில் தொண்டர் உரிமை மீட்பு குழு சந்திப்பில் நிர்வாகிகள் மத்தியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது பேசிய அவர், பழனிசாமியை பெயரைச் சொல்லவே வெட்கமாக உள்ளது. 11 தேர்தல்களில் தொடர்ந்து தோற்று அதிமுகவை படுபாதாளத்தில் பழனிசாமி தள்ளிவிட்டார் என்று குற்றம்சாட்டினார்.

அதிமுகவை படுபாதாளத்தில் தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி, அவருக்கு சரியான பாடம் புகட்டுவோம்... - ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வம்

Updated On: 

23 Dec 2025 23:05 PM

 IST

சென்னை, டிசம்பர் 23 : தமிழக சட்டமன்ற தேர்தல்களுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், சென்னை வந்த பாஜக தேசிய ஒருங்கிணைப்பாளர் பியூஷ் கோயல் (Piyush Goyal), அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து அதிமுக கூட்டணியில் மீண்டும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியுடன் (Edappadi K Palaniswami) இணைவது இனி சாத்தியமில்லை என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி குறித்து கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்தார். அவர் பேசிய குறித்து விரிவாக இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

அதிமுக கூட்டணியில் இணையும் ஓ.பன்னீர்செல்வம

டிசம்பர் 23, 2025 அன்று நடைபெற்ற தொண்டர் உரிமை மீட்பு குழு சந்திப்பில் நிர்வாகிகள் மற்றும் தனது ஆதரவாளர்கள் மத்தியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது பேசிய அவர், பழனிசாமியை பெயரைச் சொல்லவே வெட்கமாக உள்ளது. 11 தேர்தல்களில் தொடர்ந்து தோற்று அதிமுகவை படுபாதாளத்தில் பழனிசாமி தள்ளிவிட்டார். எதிர்வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு சரியான பாடம் புகட்டுவோம். எந்த சூழலிலும் எடப்பாடி பழனிசாமி உடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. என்றார்.

இதையும் படிக்க : எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் பியூஷ் கோயல்.. 50 இடங்களை கேட்க திட்டம்..

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் பரபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் பாஜக – அதிமுக கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக மத்திய அமைச்சரும், பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் டிசம்பர் 23, 2025 அன்று தமிழகம் வந்தார்.அப்போது அவருடன் அதிமுக பொதுச்செயாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி ஆகியவை குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : விஜய் ஒரு ஸ்பாயிலர் என சொன்ன பியூஷ் கோயல்? – எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பு குறித்து வெளியானத தகவல்

அப்போது அதிமுக தரப்பில் அதிமுகவிற்கு 170, பாஜகவிற்கு 23 தொகுதிகளும், பாமகவிற்கு 23 தொகுதிகளும் வழங்க சம்மதித்தாகவும், பாஜக தரப்பில் 50 தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இதனை மறுத்துள்ளார்.இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்த அவர், தமிழகத்தின் கள நிலவரம், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து பேசப்பட்டது. அதன் பின்னர் கூட்டணி கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்தித்து உரையாடினார். இதில் தொகுதி பங்கீடு பற்றி எதுவும் பேசவில்லை என்றார்.

கடத்தியவரின் ஸ்மார்ட் வாட்சை பயன்படுத்தி தப்பித்த இளைஞர் - என்ன நடந்தது?
விமான நிலையங்களில் கைவிடப்பட்ட பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் இளைஞர்
11 மாத வாடகை ஒப்பந்தம் முடிந்தும் வீட்டை காலி செய்ய மறுக்கும் வாடகையாளர்
2026ல் இந்த ஆபத்துகள் பூமியில் ஏற்படலாம்.. அதிர்ச்சி தரும் பாபா வங்காவின் கணிப்புகள்..