திமுக கூட்டணியில் தேமுதிக? சஸ்பென்ஸ் வைத்த கனிமொழி.. எகிறும் எதிர்பார்ப்பு! எதிர்பார்ப்பு!!
New parties will join in DMK alliance: நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, பல ஆண்டு காலமாக காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ளோம், அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை எனக் கூறிய அவர், பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரும் - கனிமொழி
நெல்லை, ஜனவரி 30: திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாரும், எம்.பியுமான கனிமொழி உறுதி தெரிவித்துள்ளார். கருத்து கணிப்புகள் வந்தாலும், வராவிட்டாலும் தேர்தல் களம் திமுக கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதனால், தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவும், எதிர்க்கட்சியான அஎதிர்க்கட்சியான அதிமுக ஆட்சியை பிடிக்கவும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றன.
இதையும் படிக்க : 2026 சட்டமன்ற தேர்தல்: திமுக உடன் கைக்கோர்க்கும் தேமுதிக.. எத்தனை இடங்கள் தெரியுமா?
அந்தவகையில், அதிமுக, பாஜக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியை அமைத்துள்ளது. இந்த கூட்டணியில், பாமக (அன்புமணி தரப்பு), அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் தற்போது வரை இடம்பெற்றுள்ளன.
காங்கிரஸ் – திமுக இடையே சலசலப்பு:
அதேசமயம், ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, கம்யூ கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதி மய்யம் என பல கட்சிகள் வரிசை கட்டி நிற்கின்றன. அந்தவகையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும், ஆட்சியில் அதிகாரம் தர வேண்டும் என வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. மேலும், காங்கிரஸ் கட்சியில் தமிழக நிர்வாகிகள் பலர், விஜய்யின் தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் எனவும் பேசியதால் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு நீடித்து வருகிறது.
ராகுலை சந்தித்த கனிமொழி:
இந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அண்மையில் திமுக துணைப் பொதுச்செயாலளர் கனிமொழி டெல்லியில் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கூட்டணியில் விரிசல் ஏற்படும் வகையில், காங்கிரஸ் நிர்வாகிகள் பேசி வந்த சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது. அதனால், காங்கிரஸ் – திமுக மீண்டும் கூட்டணியை தொடரும் என்றே பேசப்படுகிறது.
திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பு:
இந்த சூழலில் நெல்லையில் இன்று கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், பல ஆண்டு காலமாக காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ளோம், அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை எனக் கூறிய அவர், பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு, திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாரும், எம்.பியுமான கனிமொழி உறுதி தெரிவித்துள்ளார். கருத்து கணிப்புகள் வந்தாலும், வராவிட்டாலும் தேர்தல் களம் திமுக கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க : பரந்தூர் விமான நிலையத்தால் சென்னைக்கு மிகப்பெரிய ஆபத்து? ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?
திமுக கூட்டணியில் தேமுதிக?
இதன் மூலம், திமுக கூட்டணியில் புதிய கட்சி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக கூறப்பட்டது. அந்தவகையில், கனிமொழியின் பேச்சின் மூலம், தேமுதிக இம்முறை திமுக கூட்டணியில் இணைய உள்ளது உறுதியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, திமுக தரப்பில் தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்க சம்மதம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.