இந்த மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Heavy Rain Warning : இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, அடுத்த 24 மணி நேரத்தில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இதனால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

மாதிரி புகைப்படம்
சென்னை, பிப்ரவரி 19 : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதனால் தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்யுப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் மழை குறித்து வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, பூமத்திய ரேகைக்கு அருகே இந்திய பெருங்கடலம் மற்றும் அதனை ஒட்டி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று அறிவித்துள்ளது.
மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பிப்ரவரி 19, 2026 அன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும். பிற தமிழக மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பிப்ரவரி 20, 2026 அன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிக்க : அரசு பேருந்தில் இலவச பயணம் செய்த பெண்கள் குறித்து விமர்சனம்… ஓட்டுநர்-நடத்துநர் மீது பாய்ந்த நடவடிக்கை!
இந்த மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில் வருகிற 21, 2026 அன்று சனிக்கிழமை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வருகிற பிப்ரவரி 22, 2026 அன்று திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை, பிப்ரவரி 19, 2026 அன்று வானம் மேகத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் ஏற்படும். மேலும் அதிக பட் வெப்பநலை 31 முதல் 32 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் வரையிலும் காணப்படும்.
இதையும் படிக்க : மத்திய-மாநில அரசுகளின் உறவு எப்படி இருக்க வேண்டும்… உயர்நிலைக் குழுவின் 11 முக்கிய பரிந்துரைகள்!
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மேலும் மன்னார் வளைகுடா அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகள் தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்ட வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.