எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். சேர்க்கைக்கான நீட் 2025 கலந்தாய்வு இன்று தொடக்கம்…
NEET UG 2025 Counselling: 2025 ஆம் ஆண்டுக்கான NEET UG கலந்தாய்வு இன்று 2025 ஜூலை 21 முதல் தொடங்குகிறது. MBBS மற்றும் BDS போன்ற இளநிலை மருத்துவக் கோள்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இது ஒரு முக்கியமான கட்டமாகும். இந்தியா முழுவதும் உள்ள 1.18 லட்சம் மருத்துவக் கல்வி இடங்களுக்கு, NEET தேர்வில் தகுதி பெற்ற 12.36 லட்சம் மாணவர்கள் போட்டியிட உள்ளனர்.

நீட் 2025 கலந்தாய்வு இன்று தொடக்கம்
தமிழ்நாடு ஜூலை 21: 2025-ஆம் ஆண்டுக்கான NEET UG கலந்தாய்வு இன்று 2025 ஜூலை 21 முதல் தொடங்குகிறது. இந்தக் கவுன்சிலிங் மூலம் MBBS, BDS, BSc நர்சிங் படிப்புகளில் சேர்க்கை நடைபெறும். நாடு முழுவதும் உள்ள 1.18 லட்சம் இடங்களுக்கு 12.36 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர். அகில இந்திய ஒதுக்கீடு, மாநில ஒதுக்கீடு என நான்கு சுற்றுகள் நடைபெறும். சேர்க்கையின் கடைசி தேதி 2025 அக்டோபர் 3 என அறிவிக்கப்பட்டுள்ளது. வகுப்புகள் 2025 செப்டம்பர் 1 முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி (MCC) மற்றும் மாநிலங்களின் மருத்துவ கவுன்சிலிங் அதிகாரிகள் இணைந்து இந்த பணிகளை மேற்கொள்கின்றனர்.
அகில இந்திய மற்றும் மாநில ஒதுக்கீட்டிற்கான கவுன்சிலிங் விவரங்கள் வெளியீடு
மருத்துவக் கல்வி விரும்பும் மாணவர்கள் பெரிதும் எதிர்பார்த்த NEET UG 2025 கலந்தாய்வு (Counselling) செயல்முறை இன்று 2025 ஜூலை 21 முதல் தொடங்குகிறது. இதன்படி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் BSc நர்சிங் போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை நிகழ்ச்சி, முதல்கட்டமாக அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான ஆன்லைன் பதிவு மூலம் துவங்கப்படுகின்றது. மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி (MCC) மற்றும் மாநிலங்களின் மருத்துவ கவுன்சிலிங் அதிகாரிகள் இணைந்து இந்த பணிகளை மேற்கொள்கின்றனர்.
Also Read: தமிழக மருத்துவக் கல்லூரியில் 50 எம்பிபிஎஸ் இடங்கள் குறைப்பு.. காரணம் என்ன?
கலந்தாய்வு நான்கு முக்கிய கட்டங்களாக நடைபெறும்
இந்த ஆண்டு, நாடு முழுவதும் உள்ள 780 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் என அனைத்திலும் உள்ள சுமார் 1.18 லட்சம் மருத்துவப் படிப்பு இடங்களுக்கு, நீட் தேர்வில் தகுதி பெற்ற சுமார் 12.36 லட்சம் மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த கலந்தாய்வு நான்கு முக்கிய கட்டங்களாக நடைபெற உள்ளது. AIQ எனப்படும் அகில இந்திய ஒதுக்கீடு 15% இடங்களை உள்ளடக்கியது. இதில் மாணவர்கள் மாநில எல்லைகளை தாண்டி மற்ற மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர வாய்ப்பு பெறுகின்றனர்.
மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி அறிவித்திருக்கும் கலந்தாய்வு அட்டவணையின் படி, கவுன்சிலிங் செயல்முறை சுற்று 1, சுற்று 2, சுற்று 3 மற்றும் இறுதி காலியிடச் சுற்று என நான்கு கட்டங்களாக நடைபெறும். இவற்றின் நிறைவாக மாணவர்கள் அக்டோபர் 3, 2025க்குள் சேர்க்கை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இவ்வாண்டு மருத்துவ வகுப்புகள் செப்டம்பர் 1 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் கடந்த 2025 ஜூன் 14 அன்று வெளியிடப்பட்டன.
Also Read: முதல்வர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுமா? புதிய செயலி மூலம் அறியலாம்
கவுன்சிலிங் கட்டங்கள் மற்றும் முக்கிய தேதி விவரங்கள்:
முதல் சுற்று
அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) மற்றும் மாநில ஒதுக்கீடு: 2025 ஜூலை 21 – ஜூலை 30
கல்லூரியில் சேர்க்கை கடைசி தேதி: MCC – 2025 ஆகஸ்ட் 6, மாநிலங்கள் – ஆகஸ்ட் 12
ஆவண சரிபார்ப்பு: MCC – 2025 ஆகஸ்ட் 7 & 8, மாநிலங்கள் – 2025 ஆகஸ்ட் 13 & 14
இரண்டாம் சுற்று
MCC கவுன்சிலிங்: 2025 ஆகஸ்ட் 12 – ஆகஸ்ட் 20
மாநில கவுன்சிலிங்: 2025 ஆகஸ்ட் 19 – ஆகஸ்ட் 29
சரிபார்ப்பு தேதி: MCC – 2025 ஆகஸ்ட் 30 – செப்டம்பர் 1
மாநிலங்கள்: செப்டம்பர் 5 – 6
மூன்றாம் சுற்று
MCC: 2025 செப்டம்பர் 3 – செப்டம்பர் 10
மாநிலங்கள்: 2025 செப்டம்பர் 9 – செப்டம்பர் 18
சேர்க்கை கடைசி தேதி: MCC – 2025 செப்டம்பர் 18, மாநிலங்கள் – செப்டம்பர் 23
சரிபார்ப்பு: MCC – 2025 செப்டம்பர் 19 – 21, மாநிலங்கள் – செப்டம்பர் 24
காலியிடச் சுற்று
MCC: 2025 செப்டம்பர் 22 – செப்டம்பர் 26
மாநிலங்கள்: 2025 செப்டம்பர் 25 – செப்டம்பர் 29
முடிவான சேர்க்கை தேதி: அக்டோபர் 3, 2025
மாணவர்கள் தங்களது விருப்பத்தேர்வு மற்றும் ஆவணங்களை சரியாகத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு கட்டத்திற்கும் குறிப்பிடப்பட்ட நேரத்தில் கலந்துகொள்ள வேண்டும். மேலும், கலந்தாய்வைச் சிறப்பாகச் செயல்படுத்த, MCC மற்றும் மாநிலங்கள் இரண்டும் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறைகளிலும் கலந்தாய்வு நடவடிக்கைகள் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மாணவர்களும், பெற்றோர்களும் இந்த தேதி விவரங்களை நன்கு நினைவில் வைத்துக் கொண்டு, தாமதம் இன்றி தங்கள் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். MCC இணையதளமான www.mcc.nic.in மற்றும் மாநில வாரியாக வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ இணையதளங்களை தொடர்ந்து பார்வையிட்டு, சமீபத்திய அறிவிப்புகளுடன் கட்டண கட்டங்கள், ஆவணங்களின் பட்டியல், மற்றும் பிற தகவல்களையும் சரிபார்க்க பரிந்துரை செய்யப்படுகிறது.