இயற்கை விவசாயம் என் மனதுக்கு நெருக்கமானது… கோவையில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

PM Modi About Growth in the Agriculture Sector : கோயம்புத்தூரில் உள்ள கொடிசிய வளாகத்தில்  இயற்கை வேளாண் மாநாட்டை நவம்பர்  19, 2025 அன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும், அவர் நடைபெற்ற கண்காட்சியையும் பார்வையிட்டு, பல விவசாயிகளுடன் நேரடியாக பேசி அவர்களின் அனுபவங்களையும் கருத்துகளையும் கேட்டறிந்தார்.

இயற்கை விவசாயம் என் மனதுக்கு நெருக்கமானது... கோவையில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

பிரதமர் நரேந்திர மோடி

Updated On: 

19 Nov 2025 17:18 PM

 IST

கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில்  இயற்கை வேளாண் மாநாட்டை நவம்பர்  19, 2025 அன்று பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தொடங்கி வைத்தார். மேலும், அவர் நடைபெற்ற கண்காட்சியையும் பார்வையிட்டு, பல விவசாயிகளுடன் நேரடியாக பேசி அவர்களின் அனுபவங்களையும் கருத்துகளையும் கேட்டறிந்தார். பின்னர் பேசிய அவர், இயற்கை வேளாண்மை என் மனதுக்கு மிகவும் அருகிலான ஒரு விஷயம் என்று பேசினார். மேலும் தமிழக விவசாயிகளுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், தென்னிந்தியா இயற்கை வேளாண்மை மாநாடு சிறப்பாக நடைபெறுகிறது. அனைத்து விவசாய நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். இயற்கை வேளாண்மை மற்றும் நிலைத்த நிலக்காட்சி முறைகளை ஊக்குவிப்பது நாட்டின் எதிர்காலத்திற்கும், விவசாயிகளின் நலனுக்கும் அவசியம் என பிரதமர் வலியுறுத்தினார்.

கோவையில் பேசிய பிரதமர் மோடி

சிறுவயதிலேயே தமிழ் கற்றிருக்கலாம்

 மேலும் பேசிய பிரதமர், ”என் அன்பான விவசாய சகோதர, சகோதரிகளே, கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் முழு வேளாண் துறையும் பெரிய மாற்றத்தை கண்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் நமது நாட்டின் வேளாண் ஏற்றுமதி இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. விவசாயிகள் உழைப்பாலும், அரசின் பல்வேறு முயற்சிகளாலும் இந்திய வேளாண்மை முன்னேற்றத்தின் புதிய உயரங்களை எட்டியுள்ளது. சிறு வயதிலேயே தமிழ் கற்றுக்கொடுத்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன்.  தமிழைக் கற்றுக்கொண்டிருக்கலாமே என அடிக்கடி நினைத்தது உண்டு’ என்றார். 

இதையும் படிக்க : கோவை வரும் பிரதமர் நரேந்திர மோடி.. விவசாயிகளுக்கு ரூ. 18,000 கோடி நிதி.. பயணத்திட்டம் என்ன?

விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் கோடி

இந்த ஆண்டில் மட்டும் கிஷான் கிரெடிட் கார்டு திட்டத்தின் மூலம் விவசாயிகள் ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி ஆதரவை பெற்றுள்ளனர். இது மிகப்பெரிய உதவியாகும். விலையுயர்ந்த உரங்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி குறைப்பும் விவசாயிகளுக்கு கூடுதல் நன்மை அளித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் விவசாயிகளின் பொருளாதாரச் சுமையை குறைத்து, அவர்களின் உற்பத்தி திறனை மேம்படுத்த உதவுகின்றன. விவசாயிகளின் கணக்கில் நேரடியாக ரூ.4 லட்சம் கோடி ரூபாய் வரை தொகை செலுத்தப்பட்டுள்ளது. இது விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க உதவியுள்ளது என்று பேசினார். 

நமது உணவுகள் சந்தைகளில் அதிக அளவில் எடுத்து செல்ல வேண்டியது அவசியம். இதற்காக இயற்கை விவசாயம் குறிப்பாக ரசாயனமில்லா விவசாயம் அதன் உலகளாவிய வளர்ச்சியை விரிவுபடுத்த மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நமது விவசாயிகளின் பாரம்பரிய அறிவு, அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, அரசின் ஆதரவு என இந்த மூன்றும் ஒன்று சேரும்போது, நமது விவசாயிகள் செழிக்கிறார்கள். அதே நேரம் நமது பூமித் தாயும் ஆரோக்கியமாக இருக்கும் என்றார்.

இதையும் படிக்க : “ரூ.500 கோடிக்கு சொத்து சேர்த்த திமுக அமைச்சர்”.. நயினார் நாகேந்திரன் பகீர் குற்றச்சாட்டு!!

மேலும் பேசிய அவர், இயற்கை விவசாயத்தை வேளாண் பாடத்திட்டத்தின் முக்கிய பகுதியாக மாற்ற வேண்டும் என அனைத்து விஞ்ஞானிகளையும், ஆய்வு நிறுவனங்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். கிராமங்களுக்கு சென்று, விவசாயிகளின் வயல்களை உங்கள் ஆய்வகங்களாக மாற்றுங்கள் என்றார்.

8 மணி நேர வேலை கோரிய தீபிகா படுகோன்
காதலரை கரம் பிடிக்கப்போகும் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா?
பென்சிலால் துளையிடும் அளவுக்கு ரூ.1.5 கோடி மதிப்பிலான வீடுகளின் தரம்
ஒரே மாதத்தில் பத்து கிலோ உடல் எடை குறைந்த கே-பாப் பாடகி! என்ன ஆனது அவருக்கு?